News October 12, 2025
விஜய்யுடன் செல்போனில் பேசவில்லை: இபிஎஸ்

விஜய்யுடன் கூட்டணி அமைப்பதை சூசகமாக குறிப்பிட்டுவந்த EPS, தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார். கரூர் சம்பவத்தை தொடர்ந்து <<17973352>>விஜய்யுடன் அதிமுக கூட்டணி<<>> அமைக்கும் என செய்திகள் பரவின. இதுகுறித்து விளக்கம் அளித்த EPS, விஜய்யுடன் செல்போனில் பேசவில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்தார். அதேநேரத்தில், தேர்தல் நெருங்கும்போதுதான் கூட்டணி இறுதியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 13, 2025
தீபாவளி ட்ரீட் கொடுக்கும் ‘கருப்பு’

‘கருப்பு’ படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை என அப்படத்தின் இயக்குநர் ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார். இன்னும் கிராஃபிக்ஸ் பணிகள் நிறைவு பெறவில்லை எனவும், தீபாவளிக்கு முதல் பாடல் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், படம் நன்றாக வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார்.
News October 13, 2025
IPL-ல் இருந்து ஓய்வு பெறும் கோலி?

IPL-ல் இருந்து கோலி விரைவில் ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. RCB அணியுடன் விளம்பர ஒப்பந்தம் செய்துள்ள முன்னணி பிராண்ட் ஒன்று, கோலியை விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்ய அணுகியுள்ளதாம். ஆனால், பிற வீரர்களுக்கு அந்த ஒப்பந்தத்தை கொடுக்க அவர் அறிவுறுத்தினாராம். அடுத்த மெகா ஏலம் நடக்கும் போது அவருக்கு 38 வயதாகியிருக்கும். இதனால், இன்னும் 2 சீசன்களில் மட்டுமே விளையாடுவார் என்று கூறப்படுகிறது.
News October 13, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 13, புரட்டாசி 27 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:15 AM -7:15 AM & 4.45 PM – 5.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 PM – 12:00 PM ▶குளிகை: 1:30 AM – 3:00 AM ▶திதி: சப்தமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: தேய்பிறை