News October 12, 2025

தென்காசி அணிக்கு ரூ.4.5 லட்சம் பரிசு

image

தென்காசி மாவட்ட கால்பந்து அணி மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையே நடந்த முதலமைச்சர் கோப்பைக்கான கால்பந்து போட்டியில் மூன்றாம் பரிசு பெற்று, பரிசுத்தொகையாக ரூ.4.5 லட்சம் வென்றது. ஒவ்வொரு மாணவிக்கும் தலா 25000 வங்கி கணக்கில் வர வைக்கப்படும் என கூறப்படுகிறது. இதனையடுத்து வெற்றி பெற்ற அணியினரை தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் சிவபத்மநாதன் மற்றும் சமூக ஆர்வலர்கள் இன்று பாராட்டினர்.

Similar News

News October 12, 2025

தென்காசி: இரவு ரோந்து பணி காவலர்களின் விவரங்கள்

image

தென்காசி மாவட்ட உட்கோட்ட பகுதியில் உள்ள ஊர்களான ஆலங்குளம்,தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இன்று (12.05.25) இரவு காவல்துறை உதவி தேவைப்பட்டால் மேலே உள்ள எங்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது காவல்துறை உதவி எண் 100 ஐ அழைக்கலாம் என காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News October 12, 2025

தென்காசியில் இனி Whatsapp மூலம் தீர்வு!

image

தென்காசி மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!

News October 12, 2025

தென்காசி: தீபாவளி பாதுகாப்பு விழிப்புணர்வு

image

தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் பாதுகாப்பான தீபாவளி மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் நகர மன்ற தலைவர் சாதிர் கலந்து கொண்டு உரையாற்றினார். மாவட்ட அலுவலர் தீயணைப்பு மீட்பு பணிகள் அலுவலர், துறை சார்ந்த அலுவலர்கள், ஆராய்ச்சி துறை அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!