News October 12, 2025
தலைமை செயலகத்தில் நாளை அலுவல் ஆய்வு கூட்டம்

சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நாளை அக்.13-ம் தேதி அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. அக்.14-ல் சட்டபேரவை கூடுவதால் எத்தனை நாட்கள் நடத்தலாம் மற்றும் முக்கிய தீர்வுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 13, 2025
சென்னை: இரவு ரோந்துப் போலீசாரின் விவரம்

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (12.10.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்*
News October 13, 2025
இதுதான் முதல்வர் சொல்லும் வளர்ச்சி: நயினார் நாகேந்திரன்

சென்னையில் இன்று தேர்தல் சுற்றுப்பயணத்தை தமிழக பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் இன்று தொடங்கினார். பின் பேசுகையில், வளர்ச்சி அடைந்த தமிழகம் என முதலமைச்சர் சொல்கிறார். ஆமா உண்மைதான். 4 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் 60 சதவீதம் வளர்ச்சி, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 15% வளர்ச்சி, போக்சோ குற்றங்கள் 52% வளர்ச்சி என சுற்றுப்பயண தொடக்க விழாவில் பேசினார்.
News October 12, 2025
தி.நகர்: நடிகர் T.R வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு கடந்த சில நாள்களாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தி.நகரில் உள்ள டி.ராஜேந்தர் வீட்டுக்கு வெடிகுண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்தது. தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.