News October 12, 2025
பண மழை கொட்டும் 3 ராசிகள்

தீபாவளிக்கு பிறகு புதன் மற்றும் சுக்கிரன் விருச்சிக ராசியில் இணைய உள்ளதால் லட்சுமி நாராயண யோகம் உருவாக உள்ளது. இது 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தர போகிறது. *விருச்சிகம்: புதிய தொழில், பண வரவு, திருமணம் *சிம்மம்: பொன், பொருள் பெருகும், வருமானம் இரட்டிப்பாகும், குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். *மேஷம்: தொழிலில் முன்னேற்றம், வெளிநாட்டிற்கு பயணம், நிதி ஆதாயங்கள் பெருகும்.
Similar News
News March 13, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: அமைச்சு ▶குறள் எண்: 631 ▶குறள்: கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு. ▶பொருள்: உரிய கருவி, உற்ற காலம், ஆற்றும் வகை, ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்ந்தறிந்த செயல்படுபவனே சிறந்த அமைச்சன்.
News March 13, 2026
அந்த கொடூரர்களுக்கு மரண தண்டனை வேண்டும்: சீமான்

பள்ளி சிறுமிகள் முதல் பாட்டிகள் வரை பலரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது தினமும் அரங்கேறுகிறது என சீமான் வேதனை தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தது முதல் TN-ல் பாலியல் வன்கொடுமை நிகழாத நாளே இல்லை என்றும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற பேராபத்தான சூழல் நிலவுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். பாலியல் வன்கொடுமை செய்யும் இத்தகைய கொடூரர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News March 13, 2026
வரலாற்று சின்னங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஈரான்

யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற ஈரானின் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்று சின்னங்களை இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியுள்ளதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி குற்றஞ்சாட்டியுள்ளார். ஒரு நூற்றாண்டு கூட நீடிக்காத ஒரு ஆட்சி, பண்டைய காலங்களைக் கொண்ட நாடுகளை வெறுப்பது இயல்பானது என்றும், ஆனால் யுனெஸ்கோ எங்கே? அதன் மௌனம் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


