News April 16, 2024
IPL: சிறிது காலம் ஓய்வெடுக்க மேக்ஸ்வெல் முடிவு

உடலளவிலும், மனதளவிலும் நலம் பெற வேண்டியுள்ளதால், நடப்பு ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில் விளையாடப்போவதில்லை என RCB வீரர் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், என்னால் சிறப்பாக விளையாட முடியவில்லை. அதனால் எனக்கு பதிலாக வேறு யாராவது விளையாடட்டும் என டு பிளெஸிஸ் மற்றும் பயிற்சியாளர்களிடம் கூறினேன். உடல் மற்றும் மனதளவில் முன்னேற்றம் இருந்தால், நிச்சயம் விளையாடுவேன் எனக் கூறினார்.
Similar News
News March 22, 2026
BREAKING: அதிமுகவுடன் கூட்டணி இல்லை

திமுக <<19446966>>கூட்டணியிலிருந்து விலகிய வேல்முருகன்<<>>, பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் இணையப்போவதில்லை என விளக்கம் அளித்துள்ளார். மேலும், EPS தரப்பினர் தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், 3 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வருவதாகவும் வெளியான தகவலில் உண்மை இல்லை எனவும் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய அமைப்புகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு தனது அடுத்தகட்ட நகர்வை விரைவில் அறிவிப்பதாக கூறியுள்ளார்.
News March 22, 2026
அவர் செத்தது எனக்கு மகிழ்ச்சி: டிரம்ப்

FBI முன்னாள் இயக்குநர் ராபர்ட் முல்லர் (81) 2 நாள்களுக்கு முன் காலமானார். இந்நிலையில், ராபர்ட் முல்லர் இறந்ததில் தான் மகிழ்ச்சியடைவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். முல்லர் இறந்தது நல்லது; அவரால் இனி அப்பாவி மக்களை காயப்படுத்த முடியாது எனவும் கூறியுள்ளார். 2016ம் ஆண்டு டிரம்ப் வெற்றிக்கு பின்னால் ரஷ்யாவின் உதவி இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து முல்லர் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது
News March 22, 2026
667 காலியிடங்கள்.. ₹40,000 சம்பளம்.. APPLY NOW

மத்திய அரசின் கீழ் செயல்படும் மகாநதி நிலக்கரி நிறுவனத்தில் 667 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மைனிங், சர்வேயர் உள்ளிட்ட பணிகளுக்கு +2, டிப்ளமோ கல்வித்தகுதி போதுமானது. ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். ₹40,000-க்கு மேல் சம்பளம் வழங்கப்படும். 18-30 வயதுக்குட்பட்டவர்கள் இந்த <


