News October 12, 2025
பிஹாரில் சரிசமமாக போட்டியிடும் பாஜக – ஜேடியூ

பிஹாரில் உள்ள 243 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் 2 கட்டங்களாக நவ.6, 11-ல் நடைபெறுகிறது. NDA கூட்டணி, தங்களது தொகுதிப் பங்கீட்டை உறுதி செய்துள்ளது. தலா 101 தொகுதிகளில் BJP, JDU போட்டியிடுகிறது. LJP (ராம் விலாஸ்) 29 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா மற்றும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தலா 6 இடங்களிலும் போட்டியிடுகின்றன. அதேநேரம், INDIA கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நீடிக்கிறது.
Similar News
News October 13, 2025
ஜெய்ஸ்வால் மீது பந்தை எறிந்த வீரருக்கு அபராதம்

வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜெய்டென் சீல்ஸ்க்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 25% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ஜெய்ஸ்வால் மீது தேவையின்றி பந்தை எறிந்த காரணத்தால் அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ரன் அவுட் செய்யவே பந்தை எறிந்ததாக அவர் கூறினாலும், வீடியோக்களை நடுவர்கள் ஆராய்ந்ததில் அவர் மீது தவறு இருப்பது தெரியவந்தது. இதனால் அபராதத்துடன் அவருக்கு 2 மதிப்பெண் புள்ளிகளும் குறைக்கப்பட்டுள்ளது.
News October 13, 2025
பிரபல நடிகை காலமானார்… அதிர்ச்சி தகவல்

ஆஸ்கர் வென்ற பிரபல <<17984182>>நடிகை டயான் கீட்டன்<<>>(79) நேற்று காலமானார். இவரின் திடீர் மரணத்துக்கு என்ன காரணம் என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது. 21 வயதிலேயே ஸ்கின் கேன்சரை சமாளித்து மீண்டவர், 2015-ல் ஸ்குவாமஸ் செல் கேன்சர் பாதிப்பை எதிர்கொண்டு 2 சர்ஜரிகள் செய்துள்ளார். பின் எக்கச்சக்கமாக உணவுகளை சாப்பிடும் புலிமியா என்ற பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். எல்லாவற்றையும் சமாளித்தவர் இப்போது மறைந்துவிட்டார்.
News October 12, 2025
கூட்டணிக்காக விஜய்யிடம் பேசவில்லை: திருநாவுக்கரசர்

அரசியலில் முதல் முறையாக களமிறங்கும் விஜய்க்கு தேர்தல் நேரத்தில் மக்களின் முடிவு பக்குவத்தை ஏற்படுத்தும் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். கரூர் விவகாரத்தில் விஜய்யுடன் ராகுல் காந்தி பேசியது கூட்டணிக்காக அல்ல என்றும் விளக்கம் அளித்துள்ளார். மேலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளதாகவும் அதில் எந்தவிதமான குழப்பமும் இல்லை எனவும் கூறியுள்ளார்.