News October 12, 2025
சாதி பெயரால் தான் சிலரை தெரியும்: கோவி செழியன்

தெருக்கள், ஊர்கள், நீர்நிலைகள் ஆகியவற்றில் உள்ள சாதி பெயர்களை நீக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஆனால், இந்த அறிவிப்பிற்கு பிறகே ‘ஜி;டி.நாயுடு’ என்ற பெயரில் CM ஸ்டாலின் மேம்பாலத்தை திறந்துவைத்தார். இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இந்நிலையில், சாதிப் பெயரால் தான் சிலரை அடையாளம் காண முடியும் என அமைச்சர் கோவி செழியன் கூறியுள்ளது பேசுபொருளாகியுள்ளது. நீங்க என்ன நினைக்கிறீங்க?
Similar News
News October 13, 2025
ராசி பலன்கள் (13.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க
News October 13, 2025
அமைச்சரானதால் வருமானமே இல்லை: சுரேஷ் கோபி

மத்திய இணையமைச்சர் பதவியிலிருந்து விலக விரும்புவதாக சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆனது முதல் தனக்கு வருமானமே இல்லை என்ற அவர், மீண்டும் சினிமாவில் தொடர விரும்புகிறேன் என கூறினார். சினிமாவை விட்டுவிட்டு அமைச்சராக பதவியேற்பதை என்று தான் ஒருபோதும் விரும்பியதில்லை என்றும் தெரிவித்துள்ளார். கேரளாவின் முதல் BJP MP ஆன சுரேஷின் இந்த பேச்சால், தேசிய தலைமை கலக்கம் அடைந்துள்ளது.
News October 13, 2025
ஜெய்ஸ்வால் மீது பந்தை எறிந்த வீரருக்கு அபராதம்

வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜெய்டென் சீல்ஸ்க்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 25% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ஜெய்ஸ்வால் மீது தேவையின்றி பந்தை எறிந்த காரணத்தால் அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ரன் அவுட் செய்யவே பந்தை எறிந்ததாக அவர் கூறினாலும், வீடியோக்களை நடுவர்கள் ஆராய்ந்ததில் அவர் மீது தவறு இருப்பது தெரியவந்தது. இதனால் அபராதத்துடன் அவருக்கு 2 மதிப்பெண் புள்ளிகளும் குறைக்கப்பட்டுள்ளது.