News October 12, 2025
நெல்லை மக்களே இது ரொம்ப முக்கியம்.!

நெல்லை மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!
Similar News
News October 12, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [அக்.12] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் அசோக்குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.
News October 12, 2025
நெல்லையில் டிஆர்பி தேர்வு; 452 பேர் ஆப்சென்ட்

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இன்று முதுகலை ஆசிரியர் பணிக்கு எழுத்து தேர்வு நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 5527 தேர்வுகள் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் 5527 பேரில் 5075 பேர் மட்டுமே தேர்வெழுத வந்தனர். 452 பேர் தேர்வு எழுத வரவில்லை.
News October 12, 2025
நெல்லை: வாகன அபராதத்தை ரத்து செய்யலாம்!

நெல்லையில் உங்கள் வாகனத்திற்கு தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அதற்கு இங்கே க்ளிக் செய்து உங்கள் பெயர், மொபைல் எண், சலான் எண் ஆகியவற்றை குறிப்பிட்டு, அபராதம் தவறானது என விளக்கம் அளிக்க வேண்டும். ஆதாரம் இருந்தால் கூடுதலாக இணைக்கலாம். உங்கள் புகார் சோதனை செய்யப்பட்டு சலான் ரத்து செய்யப்படலாம். இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.