News April 16, 2024
பாஜகவால் பூத் ஏஜெண்டை கூட போட முடியாது

தினமும் பேட்டி கொடுப்பதில் தான் பாஜக போட்டி போடுவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விமர்சித்துள்ளார். கோவையில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக எந்த பூத்திலும் பூத் ஏஜெண்டுகள் இதுவரை நியமிக்கப்படவில்லை. ஆனால், பாஜக வெற்றிபெறும் என ஏ.சி ரூமில் உட்கார்ந்து கொண்டு சிலர் கருத்துக்கணிப்பு சொல்கிறார்கள். களத்தில் பாஜக என்ற கட்சியே இல்லை என்ற அவர், அதிமுக வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்றார்.
Similar News
News February 12, 2026
CINEMA 360°: ஜனநாயகன் தியேட்டர்களில் ரெய்டு

‘ஜனநாயகன்’ படம் ரிலீசாகும் போது, அதிக விலைக்கு டிக்கெட்கள் விற்றால் தியேட்டர்களுக்கு சீல் வைக்க அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது *‘ஏழுமலை’ பார்ட் 2 குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அர்ஜூன் தெரிவித்துள்ளார் *D55 படத்தில் நடிக்க சாய் பல்லவி ₹12 கோடி சம்பளம் வாங்குகிறாராம். இதன் மூலம் கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கிய நயன்தாராவை (₹10 கோடி) அவர் முந்திவிட்டாராம்.
News February 12, 2026
இந்திய அணிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி!

பயிற்சியின் போது பும்ரா வீசிய பந்து, இஷான் கிஷனின் காலை பதம் பார்த்துள்ளது. வலியால் துடித்த அவர், கிரவுண்டில் இருந்து நடக்கமுடியாமல் நடந்து வெளியேற, இன்றைய நமீபியாவுக்கு எதிரான மேட்ச்சில் அவர் விளையாட மாட்டார் எனப்படுகிறது. ஏற்கெனவே, <<19106725>>அபிஷேக் சர்மா<<>> ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இருவரும் வரும் 15-ம் தேதி PAK-க்கு எதிரான மேட்ச்சில் விளையாடுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
News February 12, 2026
திமுக கூட்டணி வெலவெலத்துப் போயிருக்கிறது: தமிழிசை

NDA கூட்டணி பலமாக இருக்கிறது. எதிர் கூட்டணிதான் வெலவெலத்துப் போயிருக்கிறது என தமிழிசை கூறியுள்ளார். முடியாது என்று எதிரணியினர் சொன்னபோதும் வெற்றிகரமாக கூட்டணியை அமைத்ததாக கூறிய அவர், அதேபோல, பாஜகவால் வெல்லவும் முடியும், ஆட்சி அமைக்கவும் முடியும் என்பதை நடத்திக் காண்பிப்போம் என்றார். மேலும், இம்முறை மிகப்பெரிய தாக்கத்தை தமிழக அரசியலில் பாஜக ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.


