News October 12, 2025

நாமக்கல்: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். SHARE பண்ணுங்க

Similar News

News October 12, 2025

நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை !

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் இன்று (அக்டோபர் 12) நாமக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.05 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நாளை (அக்டோபர் 13) முதல் முட்டையின் விலை ரூ.5.05 ஆகவே நீடிக்கும் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

News October 12, 2025

நாமக்கல் அருகே முகமூடி அணிந்து கொள்ளை!

image

நாமக்கல்: திருச்செங்கோடு, சின்னத்தம்பி பாளையம் பாப்பாங்காடு பகுதியில் வசிக்கும் கிருஷ்ணன், அவரது மனைவி இரவு 2 மணிக்கு நாய் குறைக்கும் சத்தம் கேட்டு எழ முயலும்போது, முகமூடி அணிந்த 3 நபர்கள், இருவர் முகத்திலும் ஸ்பிரே அடித்ததாகவும், காலை 7.00 மணிக்கு எழுந்து பார்க்கும் போது வீட்டின் இருந்த ஒரு பவுன் மோதிரம் மற்றும் ரூ.5000 காணவில்லை என்பதை அறிந்து மல்லசமுத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

News October 12, 2025

நாமாக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

நாமக்கல் மாவட்டத்தில் நாளை (அக்.13), மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்த மனுக்களை அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தின் மூலம், பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!