News October 12, 2025
சாய் சுதர்சன் காயம்: அப்டேட் கொடுத்த பிசிசிஐ

வெஸ்ட் இன்டீஸின் முதல் இன்னிங்ஸில் ஜான் கேம்ப்பெல்லின் கேட்ச்சை பிடித்த போது சாய் சுதர்சனுக்கு காயம் ஏற்பட்டது. வலியில் துடித்த அவரை உடனடியாக மருத்துவ குழு அழைத்து சென்றது. மூன்றாம் நாளான இன்றும் அவர் பீல்டிங் செய்யாததால் அவருக்கு பெரிய காயம் ஏற்பட்டதா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் லேசான காயம் மட்டுமே ஏற்பட்டதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 12, 2025
வரலாற்று கதையில் தனுஷ்

தனுஷுடனான படத்தை முடித்த பிறகே இன்பநிதியை, மாரி செல்வராஜ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதை மாரி உறுதி செய்துள்ளார். தனுஷை வைத்து இயக்கும் இப்படம் வரலாற்று ரீதியான படமாக இருக்கும் எனவும், மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் என்றும் கூறியுள்ளார். இதற்கான ஸ்கிரிப்ட் பணிகளுக்காக தனுஷிடம் அனுமதி கேட்டு, சிறந்த முறையில் எழுதி வருவதாகவும் மாரி அப்டேட் கொடுத்துள்ளார். கர்ணன் காம்போ கலக்குமா?
News October 12, 2025
மழைக்காலத்தில் சாப்பிட ‘ருசியான ஸ்நாக்ஸ்’

கையில் டீ, மழைத் துளிகளின் ஓசை, மெல்லிய இசை, மனதுக்கு அமைதியை கொடுக்கும் மண்வாசனை என மழைக்காலத்தின் மாலை வேளைக்கு இணை எதுவும் இல்லை. அழகான மாலை வேளைக்கு, மேலும் அழகை கொடுப்பது நம் கையில் வைத்திருக்கும் ஸ்நாக்ஸ் தான். மழைக்காலத்தில் என்னென்ன ஸ்நாக்ஸ் சாப்பிடலாம் என்று மேலே உள்ள புகைப்படங்களில் காணலாம். உங்களுக்கு பிடித்தது எது என்று கமெண்ட் செய்யுங்கள்.
News October 12, 2025
பரப்புரை பயணத்தை தொடங்கிய நயினார்

2026 தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் சுற்றுப்பயணத்தை நாயினார் நாகேந்திரன் மதுரையில் தொடங்கினர். இந்த நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை, வானதி ஸ்ரீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.