News October 12, 2025
அமமுக எல்லாம் ஒரு கட்சியா? TTV-ஐ தாக்கிய EPS

அதிமுக கூட்டணி பற்றி பேச திமுக கூட்டணியில் உள்ள காங்., கட்சிக்கு என்ன தகுதி இருக்கிறது என EPS விமர்சித்துள்ளார். TTV-யின் விமர்சனம் குறித்த கேள்விக்கு, அமமுக எல்லாம் ஒரு கட்சியா என சாடிய அவர், தனது பரப்புரையில் பங்கேற்கும் TVK-வினரிடம், கட்சி தலைமையின் அனுமதி பெற்று வருமாறு அறிவுறுத்தினோம். இருப்பினும் தன்னார்வமாக வந்து அவர்கள் பங்கேற்கின்றனர். இதை எதிர்க்கட்சிகளால் பொறுக்கமுடியவில்லை என்றார்.
Similar News
News October 12, 2025
ஒரு முறை மட்டுமே… அது எது?

`ஒரு கொடியில் ஒரு முறைதான் மலரும் மலரல்லவா’ என்று காதலை கவிஞர்கள் வர்ணித்தாலும், காதலும் பலமுறை மலரலாம். ஆனால், சில பொருள்களை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். இரண்டாம் முறை என்பது சாத்தியமே இல்லை அல்லது பயன்படுத்தவே கூடாது. அப்படிப்பட்ட பொருள்களில் சிலவற்றை மேலே உள்ள படங்களில் காணலாம். உங்களுக்கு தெரிந்த, ஒருமுறை மட்டுமே பயன்படும் பொருள்களை கமெண்ட்டில் சொல்லுங்களேன்.
News October 12, 2025
‘அம்மா SORRY.. நான் சாகப்போறேன்’

‘நான் தவறு செய்து ஒருவருக்கு மிகுந்த வலியை கொடுத்துவிட்டேன். என் தவறு மன்னிக்க முடியாதது. அம்மா என்னை மன்னித்துவிடு. நான் இப்போது கிளம்புகிறேன்’. உ.பி.,யில் இளைஞர் ஷிஷிர் பதக்கின் கடைசி வரிகள் இவை. காட்டுப் பகுதிக்குச் சென்று துப்பாக்கியால் சுட்டு அவர் தற்கொலை செய்துள்ளார். இளைஞரின் விபரீத முடிவுக்கு காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
News October 12, 2025
ஆண்களே! இந்த தப்ப பண்ணாதீங்க

சருமம் வறண்டு போகாமல் இருக்கவும், போதிய நீர்ச்சத்தை வழங்கவும் மாய்ஸ்சுரைசர் உதவுகிறது. பெரும்பாலான ஆண்கள் கிரீம்களை பயன்படுத்துவதை அசிங்கம் என நினைக்கின்றனர். பெண்கள் மட்டுமே அதை செய்வர் என்ற தவறான கண்ணோட்டத்தோடு இருக்கின்றனர். ஆனால் உங்கள் சருமத்தை Dryness, அதனால் ஏற்படும் சுருக்கங்களில் இருந்து காப்பாற்ற மாய்ஸ்சுரைசர் உதவுகிறது என நிபுணர்கள் சொல்கின்றனர். சக ஆண்களுக்கு SHARE பண்ணுங்க.