News April 16, 2024
கடன்: வங்கிகளுக்கு RBI புது உத்தரவு

கடன் கட்டணங்கள் உள்ளடக்கிய விரிவான அறிக்கையை வாடிக்கையாளர்களுக்கு அக்.1 முதல் அளிக்க வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் RBI உத்தரவிட்டுள்ளது. அதில், கடனுக்கு ஒரு ஆண்டு முழுவதும் வசூலிக்கப்படும் கட்டணம், கடன் மீட்பு கொள்கைகள், பிறரிடம் கடனை ஒப்படைப்பது தொடர்பான விவரங்களும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. வெளிப்படைத் தன்மையை ஊக்குவிக்க RBI இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.
Similar News
News January 31, 2026
10-வது தேர்ச்சி போதும்.. ₹53,330 சம்பளம்!

➤ரிசர்வ் வங்கியில் 572 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன *வயது: 18-25 ➤கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு. மாநில மொழி எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும் ➤சம்பளம்: ₹24,250 – ₹53,330 வரை ➤தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு & மொழித்திறன் தேர்வுகள் ➤பிப்ரவரி 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் ➤ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும் ➤வேலை தேடும் அனைத்து நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க.
News January 31, 2026
BREAKING: பிரபல நடிகை காலமானார்

உலகப் புகழ்பெற்ற ‘Home Alone’ படத்தில் அம்மாவாக நடித்து அசத்திய நடிகை கேத்தரின் ஓ ஹரா (71) உடல்நலக் குறைவால் காலமானார். நீண்ட கால உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவர், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது வீட்டில் இறுதி மூச்சை விட்டார். எம்மி & கோல்டன் குளோப் விருதுகளையும் வென்று அவர் சாதனை படைத்திருந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News January 31, 2026
திமுகவுக்கு பயந்தே EPS, TTV சேர்ந்தனர்: அமைச்சர்

அதிமுக கூட்டணியை பார்த்து எந்த பயமும் திமுகவுக்கு இல்லை என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். அதேசமயம், திமுக மீதான பயத்தில்தான் EPS, TTV தினகரன் பகையை மறந்து ஒன்றாக இணைந்துள்ளதாகவும், எதிர்க்கட்சிகளுக்கே திமுகதான் ஆட்சிக்கு வரும் என தெரியும் எனவும் கூறியுள்ளார். மேலும் 2026 தேர்தல்தான் திமுகவுக்கு கடைசி தேர்தல் என சொல்ல EPS என்ன கடவுளா என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.


