News October 12, 2025
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்து வருவதால் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் குடியிருக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஆற்றில் இறங்குவது, மீன் பிடிப்பது, விளையாடுவது, நீந்துவது போன்ற எந்த விதமான செயலிகளிலும் ஈடுபட வேண்டாம் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News March 4, 2026
புதுவை ஜிப்மரில் புற நோயாளிகள் பிரிவு இன்று இயங்காது

ஹோலி பண்டிகையை, மத்திய அரசு விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. இதனால் இன்று (மார்ச் 04) ஜிப்மர் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு (OPD) இயங்காது என புதுவை ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, வெளியூர்களில் இருந்து புறநோய் சிகிச்சைக்கு வருவதை நோயாளிகள் தவிர்க்கவும். மேலும், அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 4, 2026
புதுச்சேரி: 14 மீனவர்களை விடுவித்த இலங்கை

இலங்கை கடற்படையால் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மீனவர்கள் 14 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்ட மீனவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு படகோட்டிக்கு 6 மாதம் சிறை தண்டனையும் இலங்கை நீதிமன்றம் விதித்துள்ளது.
News March 3, 2026
புதுவை: PHONE-ல் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு!

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) என இந்த வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!


