News October 12, 2025
கல்கி 2: தீபிகாவுக்கு பதில் ஆல்யா!

கல்கி 2-ல் தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் ஆல்யா பட் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக தீபிகா படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து யார் அவரின் சுமதி கதாபாத்திரத்தில் நடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ஆல்யா பட் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News October 12, 2025
மகளிர் WC: ஆஸ்திரேலியாவுக்கு 331 ரன்கள் டார்கெட்

மகளிர் உலககோப்பை லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி 331 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்திய அணிக்கு பிரதிகா ராவல்(75) மற்றும் ஸ்மிருதி மந்தனா(80) அரைசதம் அடித்து வலுவான தொடக்கம் கொடுத்தனர். பின்னர் வந்த வீராங்கனைகள் அதிரடியாக விளையாடினாலும் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்ததால் இந்திய அணி 48.5 ஓவர்களில் ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய தரப்பில் அன்னபெல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
News October 12, 2025
பிஹாரில் சரிசமமாக போட்டியிடும் பாஜக – ஜேடியூ

பிஹாரில் உள்ள 243 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் 2 கட்டங்களாக நவ.6, 11-ல் நடைபெறுகிறது. NDA கூட்டணி, தங்களது தொகுதிப் பங்கீட்டை உறுதி செய்துள்ளது. தலா 101 தொகுதிகளில் BJP, JDU போட்டியிடுகிறது. LJP (ராம் விலாஸ்) 29 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா மற்றும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தலா 6 இடங்களிலும் போட்டியிடுகின்றன. அதேநேரம், INDIA கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நீடிக்கிறது.
News October 12, 2025
சாதி பெயரால் தான் சிலரை தெரியும்: கோவி செழியன்

தெருக்கள், ஊர்கள், நீர்நிலைகள் ஆகியவற்றில் உள்ள சாதி பெயர்களை நீக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஆனால், இந்த அறிவிப்பிற்கு பிறகே ‘ஜி;டி.நாயுடு’ என்ற பெயரில் CM ஸ்டாலின் மேம்பாலத்தை திறந்துவைத்தார். இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இந்நிலையில், சாதிப் பெயரால் தான் சிலரை அடையாளம் காண முடியும் என அமைச்சர் கோவி செழியன் கூறியுள்ளது பேசுபொருளாகியுள்ளது. நீங்க என்ன நினைக்கிறீங்க?