News October 12, 2025
அமெரிக்க மியூசியத்தில் காந்தாரா பஞ்சுருளி!

காந்தாரா திரைப்படத்தால் பிரபலமான, துளு நாட்டின் பாரம்பரிய சின்னமான பஞ்சுருளி முகா முகமூடி, இப்போது உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது. பல வருடங்களாக பாதுகாக்கப்பட்டு வந்த இந்த அரிய கலைப் பொருள், தற்போது USA, வாஷிங்டனில் உள்ள NMAA-வில் நிரந்தர இடத்தை பிடித்துள்ளது. இது இந்தியாவின் கலாச்சாரம், கலை மற்றும் நாட்டுப்புற மரபுகளை உலக அரங்கில் இணைக்கும் ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.
Similar News
News October 12, 2025
பள்ளிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை

தீபாவளி பண்டிகை இந்த மாதம்(அக்.20) திங்கள்கிழமை கொண்டாடப்படவுள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமையுடன் சேர்த்து பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள்கள் தொடர் விடுமுறையாகும். தீபாவளிக்கு அடுத்தநாள் விடுமுறை அளிக்கவும் அரசு பரிசீலித்து வருகிறது. தொடர் விடுமுறையையொட்டி, அக்.16 முதல் <<17930326>>சிறப்பு பஸ்கள்<<>> அறிவிக்கப்பட்டுள்ளன. அதனால், ஊர்களுக்கு செல்பவர்கள் தற்போதே திட்டமிட்டுக் கொள்ளுங்கள். SHARE IT.
News October 12, 2025
புது இடத்துக்கு மாறினால் தூக்கம் வராதது ஏன்?

சிலருக்கு இடம் மாறி படுத்தால் தூக்கம் வராது. இதனை First Night Effect என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதாவது, முன் பின் தெரியாத ஒரு இடத்தில் நாம் தூங்கும்போது, நமது இடது பக்க மூளை ஆக்டிவாகவே இருக்கிறதாம். ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ என மூளை நினைப்பதால்தான் புது இடத்தில் பலரால் நிம்மதியாக தூங்கமுடிவதில்லை. தொடர்ந்து அந்த இடத்தில் தூங்கினால் மட்டுமே இது சரியாகும் என்கின்றனர். நீங்களும் இப்படிதானா?
News October 12, 2025
அரசன் படத்தின் புதிய அப்டேட்!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ அக். 17-ம் தேதி காலை 10.07-க்கு யூடியூபில் வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. முன்னதாக அக்.16-ம் தேதி மாலை 6.02 மணிக்கு திரையரங்குகளில் பிரத்யேகமாக ப்ரோமோ திரையிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் வெற்றிமாறன், சிம்புவுடன் இசையமைப்பாளர் அனிருத் முதல்முறையாக கைகோர்க்கிறார்.


