News October 12, 2025

தென்காசி: தீபாவளி பாதுகாப்பு விழிப்புணர்வு

image

தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் பாதுகாப்பான தீபாவளி மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் நகர மன்ற தலைவர் சாதிர் கலந்து கொண்டு உரையாற்றினார். மாவட்ட அலுவலர் தீயணைப்பு மீட்பு பணிகள் அலுவலர், துறை சார்ந்த அலுவலர்கள், ஆராய்ச்சி துறை அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News October 12, 2025

தென்காசியில் இனி Whatsapp மூலம் தீர்வு!

image

தென்காசி மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!

News October 12, 2025

தென்காசி: கனரா வங்கியில் வேலை APPLY NOW!

image

கனரா வங்கியில் தமிழ்நாடு முழுவதும் 394 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. பணி: Graduate Apprentices
2. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
3. சம்பளம்: ரூ.15,000
4. வயது வரம்பு: 20-28 (SC/ ST-33, OBC 31)
5. கடைசி தேதி: 12.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>கிளிக்<<>> செய்யவும். ஷேர் பண்ணுங்க!

News October 12, 2025

தென்காசி: புளியங்குடி காய்கறி சந்தை நாளைக்கு லீவ்

image

தென்காசி மாவட்டத்தில் இயங்கி வரும் பெரிய சந்தைகளில் ஒன்று புளியங்குடி காய்கறிச் சந்தை. ஒவ்வொரு மாதமும் தமிழ் மாத கடைசி திங்கட்கிழமை மாதாந்திர விடுமுறை விடப்படும். அந்த வகையில் நாளை(அக்.13) திங்கள்கிழமை மாதாந்திர விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் நாளை புளியங்குடியில் காய்கறி சந்தை இயங்காது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!