News October 12, 2025

BREAKING: தங்கத்திற்கு மாற்றாக விற்பனை

image

TN-ல் வெள்ளி கட்டிகள் விற்றுத் தீர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், வெள்ளி கட்டி வாங்க மக்கள் 10 நாள்கள் காத்திருக்க வேண்டும் என தமிழ்நாடு நகை வியாபாரிகள் சம்மேளனம் அறிவித்துள்ளது. <<17982725>>தங்கம் விலை<<>> கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், வெள்ளி விலையும் வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாள்களில் மட்டும் வெள்ளி விலை கிலோவுக்கு ₹30,000 அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.

Similar News

News October 12, 2025

ஆம்புலன்ஸ் காத்திருப்பு நேரம் குறைப்பு

image

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையின் காத்திருப்பு நேரம் சராசரியாக 7:57 நிமிடமாக குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 5 நிமிடம், செங்கல்பட்டு, கடலூரில் 7 நிமிடம், பிற மாவட்டங்களில் 8 நிமிடத்திற்குள்ளும் ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதிக விபத்து நடக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கெல்லாம் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 108 சேவை பற்றி உங்கள் கருத்து என்ன?

News October 12, 2025

தீபாவளிக்கான ஸ்பெஷல் கோலங்கள் உங்களுக்காக….

image

தீபாவளி என்றால் பட்டாசு, புத்தாடை, இனிப்பு மட்டுமல்ல. வாசலில் போடும் அழகான கோலங்களும் தான் ஸ்பெஷல். தீபாவளியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் என்ன கோலம் போட்டிருக்கு என்று பார்ப்பதே பலருக்கும் பிடித்த ஒரு விஷயம். அப்படி வீட்டு வாசலை அழகாக்கும் கோலங்கள் உங்களுக்காக… ஸ்வைப் பண்ணி பாருங்க…

News October 12, 2025

தங்கம் விலை தடாலடியாக மாறியது

image

நகை வாங்க திட்டமிட்டோருக்கு, தங்கம் விலை கடந்த வாரம் கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஒரு வாரத்தில் மட்டும் 22 காரட் தங்கத்தின் விலை ₹4,400 அதிகரித்துள்ளது. அக்.5-ல் (கடந்த ஞாயிற்றுக்கிழமை) 1 சவரன் ₹87,600-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ₹92,000-க்கு விற்பனையாகி வருகிறது. செய்கூலி, சேதாரத்தை கணக்கிட்டால் 1 சவரனின் விலை ₹1 லட்சத்தை தாண்டும். இனிமே நகை வாங்குறது கஷ்டம்போலயே..!

error: Content is protected !!