News April 16, 2024

கன்னடத்தில் பேசி வாக்கு சேகரித்த அண்ணாமலை

image

பாஜக தலைவர் அண்ணாமலை கன்னட மொழியில் பேசி வாக்கு சேகரித்தார். கோவை தொகுதியில் போட்டியிடும் அவர், சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது கன்னடம் பேசும் மக்கள் வசிக்கும் பகுதியில் பரப்புரை செய்த அவர், தமிழில் பேசுவதை நிறுத்திவிட்டு கன்னட மொழியில் பரப்புரையை தொடர்ந்தார். அண்ணாமலை ஏற்கெனவே சில இடங்களில் இந்தியில் பேசி வாக்கு சேகரித்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 29, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 7 மணி வரை கோயம்புத்தூர், தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று IMD அறிவித்துள்ளது. மேலும், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி & ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

News April 29, 2025

நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்

image

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முதல்முறையாக நாளை மத்திய அமைச்சரவை கூடுகிறது. பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு கடந்த 23-ம் தேதி பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூடியது. அப்போது, சிந்து நதி நீர் நிறுத்தம், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்பட 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில், நாளை காலை 11 மணிக்கு PM மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூடுவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

News April 29, 2025

பங்குச்சந்தைகளில் மாற்றம் இல்லை

image

இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்ற, இறக்கங்களை கண்டு இறுதியில் பெரிய மாற்றமின்றி வர்த்தகத்தை நிறைவு செய்தது. காலையில், வர்த்தகம் தொடங்கியவுடன், 120 புள்ளிகள் உயர்ந்த நிஃப்டி, மதியம் 12 மணியளவில் சரிவைக் கண்டது. சில நேரங்களில் நேற்றைய புள்ளிகளுக்கு கீழ் சென்ற நிஃப்டி, வர்த்தக நேர முடிவில் 7 புள்ளிகள் மட்டும் உயர்ந்து 24,335 புள்ளிகளில் இருந்தது. சென்செக்ஸ் இன்று 70 புள்ளிகள் உயர்ந்தது.

error: Content is protected !!