News October 12, 2025
அதிமுக கூட்டணியில் புதிய கட்சிகள்: G.K.வாசன்

கூட்டணியை அறிவிக்காத மேலும் சில கட்சிகள் அதிமுக தலைமையிலான NDA கூட்டணிக்கு வரும் என G.K.வாசன் தெரிவித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் 51% அதிகரித்துள்ளதாக திமுக அரசை விமர்சித்தார். மேலும், கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கை CBI வசம் கொடுத்தால் மட்டுமே உண்மை வெளிவரும் என்றார். அத்துடன், 2026 தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் தமாகா போட்டியிட விரும்புவதாகவும் கூறினார்.
Similar News
News October 12, 2025
மோசமாக அடிக்காதே.. லாரா – ஜெய்ஸ்வால் க்யூட்

‘எங்களுடைய பவுலர்களை மோசமாக அடிக்காதே’ என்று புன்னகையுடன் ஜெய்ஸ்வாலிடம் WI கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா கோரிக்கை வைத்தார். அதற்கு, ‘முயற்சி செய்கிறேன் சார்’ என ஜெய்ஸ்வால் புன்னகையுடன் பதிலளித்தார். முன்னாள், இந்நாள் லெஜன்ட்ஸ் பேசிய இந்த க்யூட் மொமண்ட் தற்போது வைரலாகிறது. இந்த டெஸ்ட் போட்டியை ஜாம்பவான்களான பிரைன் லாரா, VV ரிச்சர்ட் பார்த்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
News October 12, 2025
BREAKING: தீபாவளி விடுமுறை.. அமைச்சர் முக்கிய அறிவிப்பு

தீபாவளி விடுமுறையையொட்டி ஆம்னி பஸ் டிக்கெட் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், கூடுதல் கட்டணம் வசூலித்தால் <<17984664>>கடும் நடவடிக்கை<<>> எடுக்கப்படும் என எச்சரித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், பல ஆம்னி பஸ்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக குறிப்பிட்டுள்ளார். விரைவில் ஆம்னி பஸ் உரிமையாளர்களை அழைத்து இதுகுறித்து பேசவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
News October 12, 2025
ஆப்கான் தாக்குதலில் 58 பாக்., வீரர்கள் பலி

காபுலில் பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தானின் எல்லையோர முகாம்களை நோக்கி ஆப்கானிஸ்தான் சரமாரி தாக்குதலை மேற்கொண்டது. இதில் 25 பாகிஸ்தான் ராணுவ முகாம்களை கைப்பற்றியதாக கூறும் ஆப்கன், 58 பாக். ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. அதேபோல் 9 ஆப்கான் வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.