News October 12, 2025
தேனி: வெள்ளப்பெருக்கு காரணமாக தடை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, சுற்றுலா பயணிகள் அருவிக்குச் செல்வதற்கு வனத் துறையினா் சனிக்கிழமை தடை விதித்தனா்.
கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்ததால், கும்பக்கரை அருவியில் நீா்வரத்து அதிகரித்தது. அருவியில் குளிக்க தடை விதித்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்.
Similar News
News October 12, 2025
தேனி: B.E படித்தவர்களுக்கு ரூ.90,000 சம்பளத்தில் வேலை

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பொறியியல் காலியிடங்களுக்கு 474 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. CIVIL, MECH., EEE, ECE உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த B.E/B.Tech படித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அக்.16க்குள் <
News October 12, 2025
தேனி: வங்கியில் வேலை; இன்றே கடைசி நாள்!

தேனி மக்களே, கனரா வங்கி (Canara Bank) 3500 அப்ரண்டிஸ் (Graduate Apprentices) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News October 12, 2025
திறனறித் தேர்வில் 4912 மாணவர்கள் பங்கேற்பு

தேனி மாவட்டத்தில் 20 மையங்களில் +1 மாணவர்களுக்கான தமிழ் திறனறித் தேர்வு நேற்று (அக்.11) நடைபெற்றது. இந்த தேர்வு எழுத அரசு, உதவி பெறும், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 5157 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 4912 பேர் தேர்வு எழுதினர். 245 மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை. இத்தேர்வில் தகுதி பெறும் மாணவர்களுக்கு ஆண்டிற்கு 10,000 வீதம் 2 ஆண்டுகளுக்கு 20,000 வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தகவல்.