News April 16, 2024
சிகரெட் கேட்ட நபருக்கு கத்தி குத்து

சின்னசேலம் அண்ணாநகர் பகுதியில் சாலையில் பெரியசாமி என்பவர் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் சிகரெட் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஆகி அடிதடியில் முடிந்தது. அப்போது, ஆத்திரமடைந்த பெரியசாமி கடையில் வைத்திருந்த கத்தி எடுத்து தினேஷ் கையில் குத்தியுள்ளார். இதில் காயம் அடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Similar News
News August 5, 2025
கள்ளக்குறிச்சி: 10th போதும்… ரயில்வேயில் வேலை ரெடி

கொங்கன் ரயில்வேயில் உள்ள 28 கீமேன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கீமேன் பதவிக்கு 10ஆம் வகுப்பு முடித்த 18 – 28 வயது உள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.35,500 வரை சம்பளம் வழங்கப்படும். தேர்வு கிடையாது. ஆர்வமுள்ளவர்கள் <
News August 5, 2025
கள்ளக்குறிச்சியில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

கள்ளக்குறிச்சியில் இன்று (ஆக.05) பல்வேறு இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, சின்னசேலம், திருக்கோவிலூர், கல்வராயன்மலை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்க பெறாத பெண்கள் பங்கேற்று விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 பெற விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க
News August 5, 2025
கள்ளக்குறிச்சி: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

கள்ளக்குறிச்சியில் ஆகஸ்ட்-5 மகாலட்சுமி திருமண மண்டபத்திலும், சங்கராபுரம் நாகபிள்ளை திருமண மண்டபத்திலும், அதையூர் ஏ.எம்.எஸ் திருமண மண்டபத்திலும், கூகையூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், ஆவி.கொளப்பாக்கம் செளபாக்யா திருமண மண்டபத்திலும், தொரடிப்பட்டு காமாட்சி அம்மன் கோயிலிலும் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்க பெறாத பெண்கள் பங்கேற்று விண்ணப்பித்து பயன்பெறலாம்.