News October 12, 2025
GAS டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக் 3-வது நாளாக நீடிக்கிறது. இதனால், ஒரு சில இடங்களில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கு மேலும் ஸ்டிரைக் நீடித்தால், சிலிண்டர் கிடைக்காமல் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், பேச்சுவார்த்தைக்கு எண்ணெய் நிறுவனங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இன்று மாலை அல்லது நாளை சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிகிறது.
Similar News
News October 12, 2025
காசா அமைதி ஒப்பந்தம்: மோடி செல்லவில்லை

காசா அமைதி உச்சி மாநாடு, எகிப்தில் நாளை நடைபெறுகிறது. இதில், மோடி, டிரம்ப் உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இந்த ஒப்பந்த நிகழ்வுக்கு மோடி பங்கேற்கவில்லை எனவும், வெளியுறவுத் துறை இணையமைச்சர் வர்தான் சிங், இந்தியா சார்பாக செல்வார் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வில் டிரம்ப் உடன் எகிப்து அதிபர் அப்டெல் ஃபடா அல்-சிஸி ஒருங்கிணைக்கிறார்.
News October 12, 2025
BREAKING: விஜய் முக்கிய முடிவு

கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை வரும் 17-ம் தேதி விஜய் சந்திப்பதற்காக, தவெக தரப்பில் போலீஸ் அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது சிறு அசம்பாவிதமோ, அசௌகரியமாக சூழலோ ஏற்படக் கூடாது என்ற முடிவில் விஜய் உறுதியாக உள்ளார். அதனால், நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். தொண்டர்கள் உள்பட வெளியாள்கள் யாரும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
News October 12, 2025
ரேஷன் கார்டுக்கு தீபாவளி பரிசு.. அரசு முக்கிய உத்தரவு

புதுச்சேரியில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ₹570 மதிப்பிலான <<17957997>>தீபாவளி தொகுப்பு<<>> வழங்கப்படும் என CM ரங்கசாமி அறிவித்திருந்தார். அதனை மக்களுக்கு விநியோகம் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இம்மாதத்திற்கான ரேஷன் பொருள்களை தீபாவளி தொகுப்பு முன்னரே மக்களுக்கு வழங்க வேண்டும் என ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். TN-ல் தீபாவளி பரிசாக முதியோருக்கு வேட்டி, சேலை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.