News October 12, 2025
அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்

தஞ்சை, பட்டுக்கோட்டையில் 4 அதிமுக கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்தனர். பட்டுக்கோட்டை நகராட்சியை சேர்ந்த 31-வது வார்டு கவுன்சிலர் குமணன், 4-வது வார்டு கவுன்சிலர் ஜெயராமன், 28-வது வார்டு கவுன்சிலர் லதா ஆண்ட்ரூஸ், 20-வது வார்டு கவுன்சிலர் சுரேஷ் ஆகியோர் கூண்டோடு திமுகவில் இணைந்துள்ளனர். இதனிடையே, இவர்கள் நான்கு பேரையும் அதிமுகவில் இருந்து நீக்கி, EPS சற்றுமுன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News October 12, 2025
BREAKING: விஜய் முக்கிய முடிவு

கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை வரும் 17-ம் தேதி விஜய் சந்திப்பதற்காக, தவெக தரப்பில் போலீஸ் அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது சிறு அசம்பாவிதமோ, அசௌகரியமாக சூழலோ ஏற்படக் கூடாது என்ற முடிவில் விஜய் உறுதியாக உள்ளார். அதனால், நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். தொண்டர்கள் உள்பட வெளியாள்கள் யாரும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
News October 12, 2025
ரேஷன் கார்டுக்கு தீபாவளி பரிசு.. அரசு முக்கிய உத்தரவு

புதுச்சேரியில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ₹570 மதிப்பிலான <<17957997>>தீபாவளி தொகுப்பு<<>> வழங்கப்படும் என CM ரங்கசாமி அறிவித்திருந்தார். அதனை மக்களுக்கு விநியோகம் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இம்மாதத்திற்கான ரேஷன் பொருள்களை தீபாவளி தொகுப்பு முன்னரே மக்களுக்கு வழங்க வேண்டும் என ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். TN-ல் தீபாவளி பரிசாக முதியோருக்கு வேட்டி, சேலை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
News October 12, 2025
சாய் சுதர்சன் காயம்: அப்டேட் கொடுத்த பிசிசிஐ

வெஸ்ட் இன்டீஸின் முதல் இன்னிங்ஸில் ஜான் கேம்ப்பெல்லின் கேட்ச்சை பிடித்த போது சாய் சுதர்சனுக்கு காயம் ஏற்பட்டது. வலியில் துடித்த அவரை உடனடியாக மருத்துவ குழு அழைத்து சென்றது. மூன்றாம் நாளான இன்றும் அவர் பீல்டிங் செய்யாததால் அவருக்கு பெரிய காயம் ஏற்பட்டதா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் லேசான காயம் மட்டுமே ஏற்பட்டதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.