News October 12, 2025

சுசீந்திரம் அருகே டூவிலர், கார் மோதி விபத்து

image

சுசீந்திரம் அருகே ஆசிராமம் பகுதியில் இன்று காலை இருசக்கர வாகனம் மீது அந்த வழியாகச் சென்ற கார் ஒன்று மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் படுகாயமடைந்தார். உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தகவலறிந்து சென்ற எஸ்.பி. ஸ்டாலின் காயமடைந்தவரை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார்.

Similar News

News March 8, 2026

குமரி: இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை

image

கட்டி மாங்காடு அருகே அரசர்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் சோபி (28). இவருக்கு 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சோபி வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். இது குறித்து இரணியல் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். திருமணம் ஆகி 5 ஆண்டுகளே ஆனதால் சோபி தற்கொலை குறித்து பத்மநாபபுரம் ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார்.

News March 8, 2026

குமரி: விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை

image

கருங்கல் அருகே பாலூர் கிளி மூக்கு விளைபகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 60). கொத்தனாரான இவர் நேற்று காலை வீட்டில் பூச்சி கொல்லி மருந்தை எடுத்துக் குடித்தார். இதில் அவர் உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில், கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வராஜ் தற்கொலை செய்து கொள்ள என்ன காரணம் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

News March 7, 2026

குமரி: குளித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு

image

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி காவல் நிலையத்துக்குட்பட்ட தெரிசனங்கோப்பு பகுதியில் உள்ள ஆற்றில் இன்று மதியம் குளித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் 6 சவரன் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பூதப்பாண்டி போலீசாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

error: Content is protected !!