News October 12, 2025

தஞ்சை: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

image

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <>eportal.incometax.gov.in <<>>என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

Similar News

News March 14, 2026

இருள் சூழ்து காணும் தஞ்சை பெரிய கோயில் கோபுரம்

image

தஞ்சை பெரிய கோயில் கோபுர கலசத்தில் உச்சியில் மின்விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. முன்னதாக தஞ்சையின் எந்த ஒரு பகுதியும் இருந்தாலும் கோபுர கலசத்தை பார்க்க முடியும். இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக விமான கோபுரத்தின் உச்சியில் உள்ள விளக்கு எரியவில்லை. இதனால் கோயிலில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே விளக்கை ஒளிர செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News March 14, 2026

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; இளைஞர் கைது

image

பாபநாசம் பகுதியை சேர்ந்தவர் பாபு. கொத்தனாரான இவர் வீட்டு வாசலில் கேரம்போர்டு விளையாடிக் கொண்டிருந்த 4ம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமிக்கு பெரிய கேரம் போர்டு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பாபநாசம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், பாபுவை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

News March 14, 2026

தஞ்சாவூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices<<>>.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!