News October 12, 2025
திருப்பூர்: டிகிரி போதும்.. கனரா வங்கியில் வேலை!

திருப்பூர் மக்களே, கனரா வங்கி (Canara Bank) 3500 அப்ரண்டிஸ் (Graduate Apprentices) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15,000/- வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
Similar News
News November 5, 2025
திருப்பூர் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழப்பு

திருப்பூர் விஜயமங்கலம் வாய்ப்பாடி அருகே 65 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்து கிடைப்பதாக திருப்பூர் ரெயில்வே போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் உயிரிழந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 5, 2025
வெள்ளகோவில் அருகே விபத்து: ஒருவர் பலி

வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன் (56). இவர் நேற்று இரவு வேலையை முடித்துவிட்டு, நாகமநாயக்கன்பட்டியில் உள்ள வீட்டுக்கு பைக்கில் வந்த போது பின்னால் வந்த பைக் மோதியது. அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். வெள்ளகோவில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 5, 2025
திருப்பூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கம்

எர்ணாகுளத்தில் இருந்து பாரவுனி (பீகார்) இடையே திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. எர்ணாகுளம்-பாரவுனி (வண்டி எண்.06159) ஒரு வழி சிறப்பு ரெயில் நாளை 5-ம் தேதி (புதன்கிழமை) எர்ணாகுளத்தில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு வரும் 8-ந்தேதி (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு பாரவுனி ரயில் நிலையத்தை சென்றடையும். இந்த தகவலை சேலம் ரயில்வே கோட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.


