News October 12, 2025
FLASH: சிக்கன் விலை உயர்வு

நாமக்கல் சந்தையில் கறிக்கோழி விலை கிலோவுக்கு ₹3 அதிகரித்துள்ளது. இதனால், கறிக்கோழி உயிருடன் ஒரு கிலோ ₹95-க்கு விற்பனையாகிறது. முட்டைக்கோழி கிலோ ₹120-க்கும், முட்டை ₹5.50-க்கும் விற்பனையாகிறது. சென்னையை பொறுத்தவரையில் கறிக்கோழி கிலோ 160-க்கும், தோல் நீக்கிய கறி கிலோ ₹200-₹220 வரையிலும் விற்பனையாகிறது. புரட்டாசி மாதம் நிறைவடைய உள்ளதால் சிக்கன் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. உங்கள் ஊரில் விலை என்ன?
Similar News
News March 10, 2026
வங்கிக் கணக்கில் 2,000.. வந்தாச்சு HAPPY NEWS

விவசாயிகளுக்கான PM KISAN திட்டத்தின் 22-வது தவணைத் தொகை ₹2,000, மார்ச் 13-ம் தேதி விடுவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அசாமில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் இந்த நிதியை பிரதமர் மோடி விடுவிக்க உள்ளார். பிப்ரவரி மாதமே இந்த நிதி வரும் என காத்திருந்த விவசாயிகளுக்கு, இப்போது நல்ல செய்தி வந்துள்ளது. முக்கியமாக, உங்கள் வங்கிக் கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
News March 10, 2026
+2 வினாத்தாளில் Album song.. விளக்கம் தந்த CBSE

+2 கணித தேர்வில் வழங்கப்பட்ட வினாத்தாளின் QR Code-ல் <<19344031>>யூடியூபில் உள்ள ஆல்பம் பாடல்<<>> ப்ளே ஆனதாக சர்ச்சை வெடித்த நிலையில் அதுகுறித்து CBSE விளக்கமளித்தது. வினாத்தாள் சரியாக இருந்ததாகவும், தேர்வின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
News March 10, 2026
சிலிண்டர் தட்டுப்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுங்க: EPS

உரிய நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என்று மத்திய அரசை EPS வலியுறுத்தியுள்ளார். அதேபோல், மக்களிடையே தேவையற்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும் வேலைகளை விடுத்து, TN-ல் உணவகங்கள் இயங்குவதற்கான எரிவாயு ஏற்பாடுகள், சலுகைகளை மாநில அரசு செய்து தரவும் வலியுறுத்தினார். மேலும், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அம்மா உணவகங்களை முழுவீச்சில் இயங்க வைக்கவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


