News October 12, 2025
நாகை: மின்னல் தாக்கி பள்ளி மாணவன் பலி

நாகை மாவட்டம், கீழையூரை சேர்ந்த புரட்சிதாசன் மகன் தீபராஜ் (13). திருப்பூண்டி அரசு நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்த இவர், நேற்று வீட்டின் மாடியில் நின்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில் மயங்கி விழுந்தார். இதையடுத்து மாணவனை மீட்ட அவரது உறவினர்கள் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், தீபராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News March 5, 2026
நாகை கோர்ட் அதிரடி உத்தரவு!

கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கீழ்வேளூர் அருகே இறையான்குடியில் திமுக – அதிமுக கட்சிகளுக்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் சிபிஎம் கட்சியின் அலுவலகம் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நாகை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், பலமுறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாத இன்ஸ்பெக்டர்கள் சிதம்பரபாரதி, கணேஷ் மீது பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
News March 5, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில் (மார்ச்.04) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.05) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 5, 2026
நாகையில் வேளாண்மை கண்காட்சி – விவசாயிகளுக்கு அழைப்பு

நாகை, வெளிப்பாளையம் GVR திருமண மண்டபத்தில் வருகிற மார். 6ஆம் தேதி உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதில் வேளாண்மை, தோட்டக்கலை, அங்கக சான்று துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை, வேளாண் அறிவியல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் அரங்குகள் அமைக்கின்றன.
எனவே விவசாயிகளும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வேளாண்மை இணை இயக்குநர் பாபு அழைப்பு விடுத்துள்ளார்.


