News April 16, 2024
வேலூரில் நடிகர் சுந்தர்.சி பிரச்சாரம்

நேற்றிரவு 7 மணியளவில் வேலூர் மாநகரில் பாகாயம் பகுதியில், வேலூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து திரைப்பட நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், நான் எம்ஜிஆரின் ரசிகன். இந்தத் தொகுதியில் வேலைவாய்ப்பு முகாம்கள், மருத்துவமனை நடத்தி நிறைய மக்கள் சேவையை தொடர்ந்து செய்துவரும் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்றார்.
Similar News
News September 18, 2025
வேலூரில் பட்டதாரிகளுக்கு ரூ.6 லட்சம் மானியம்!

வேலூர் பட்டதாரிகளே..தொழில் முனைய ஆர்வம் உள்ளவரா நீங்கள்? பணம் இல்லையே என கவலை வேண்டாம். தமிழக அரசால் உங்கள் ஊரில் உழவர் நல மையம் அமைக்க ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. மேலும், இந்தத் துறையில் இலவச சிறப்பு பயிற்சி பெற மாவட்ட வேளாண் பயிற்சி நிலையம், வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகலாம். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <
News September 18, 2025
BREAKING: வேலூர் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அதிக அளவு மழை பெய்து வருகிறது. இதனால் கலவகுண்டா நீர்த்தேக்கத்திலிருந்து உபரி நீர் வெளியேற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொன்னை ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள மாதாண்டகுப்பம், எருக்கம்பட்டு, வள்ளிமலை, மேல்பாடி, கீழ்பாதநல்லூர், தேன்பள்ளி பகுதியில் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்து மக்களுக்கு தெரியப்படுத்துங்க
News September 18, 2025
வேலூரில் அரசு சேவைகளை பெற அலைய வேண்டாம்!

வேலூர் மாவட்டத்தில் இன்று (செப்.,18) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் மாநகராட்சி-சுசீ நாடர் திருமண மண்டபம், ஓட்டேரி, 2.குடியாத்தம் நகராட்சிக்கு செங்குந்தர் திருமண மண்டபம், காமாட்சியம்மன் பேட்டை. இங்கு அரசின் 13 துறைகளை சேர்ந்த 43 சேவைகளுக்கு கோரிக்கை மனுக்கள் வழங்கப்படுகிறன்றன. மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.