News October 12, 2025

கடலூர்: மனைவி திட்டியதால் கணவன் தற்கொலை

image

ஒரத்தூர் அடுத்த சக்திவிளாகம் கிராமத்தை சேர்ந்தவர் தொழிலாளி சேகர்(60). இவருக்கும், இவரது மனைவி சுசிலா தேவிக்கும்(50), இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதில், மனமுடைந்த சேகர் விஷத்தை குடித்துள்ளார். பின்னர் சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஒரத்தூர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News March 8, 2026

கடலூர்: பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 1 ஊக்கத்தொகை

image

கடலூர் மாவட்டத்தில் 264 தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களிடமிருந்து தினமும் 50,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கத்தினால் பால் உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை ஈடுகட்டும் வகையில் 3 மாத காலத்திற்கு மட்டும் லிட்டருக்கு ரூ.1 ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். SHARE

News March 8, 2026

கடலூர்: ரூ.1.11 கோடி மோசடி – குற்றவாளி கைது

image

களையூர் பகுதியை சேர்ந்த ரஞ்சனி (36) என்பவரிடம் தட்டாஞ்சாவடியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் பணம் கொடுத்தால் அதனை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி, ரூ.36 லட்சம் பெற்று ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் பலரிடம் ரூ.1.11 பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். SHARE பண்ணுங்க!

News March 8, 2026

கடலூர்: சாலையில் கிடந்த அடையாளம் தெரியாத சடலம்

image

கடலூர் முதுநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஊர் பெயர் தெரியாத சுமார் (70) வயது மதிக்கத்தக்க முதியவர். கடந்த மார்ச் 5ஆம் தேதி, பூண்டியாங்குப்பம் நெடுஞ்சாலையில் சாலை விபத்தில் இறந்து விட்டார். இவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் முதுநகர் காவல் நிலையத்திற்கு 9944661847, 9498100555 என்ற செல்பேசி எண்ணில் தகவல் தெரிவிக்குமாறு, இன்று முதுநகர் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

error: Content is protected !!