News October 12, 2025
BREAKING: டாஸ்மாக் கடைகளில் முக்கிய மாற்றம்

TASMAC கடைகளில் கூடுதல் பண வசூலை முற்றிலும் ஒழிக்க MRP விலையை ஸ்கேன் செய்து செலுத்தும் புதிய வசதி இந்த வாரத்திற்குள் அமலுக்கு வரவுள்ளது. தற்போதுள்ள கருவிகளில் சில கடைகளில் ₹10, ₹20 கூடுதலாக சேர்த்து வசூல் செய்வதாக புகார்கள் எழுந்தன. இதனால், ரொக்கப்பணம், டிஜிட்டல் பணம் வசூலுக்கு நவீன ஸ்கேனர் கருவி பயன்படுத்தப்பட உள்ளது. ஏற்கெனவே சில தினங்களாக நாமக்கல், மதுரையில் சோதனை செய்யப்பட்டுள்ளது.
Similar News
News October 12, 2025
அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில், பள்ளி மைதானத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியாகி உள்ளனர். Football போட்டியின் போது, மைதானத்தில் திடீரென உள்ளே புகுந்த 18 வயது இளைஞர், சரமாரியாக சுட தொடங்கியுள்ளார். இதில், 12 பேர் காயமடைந்த நிலையில், 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் துப்பாக்கிச்சூட்டில் மட்டும் சுமார் 17,000 பேர் இறப்பதாக கூறப்படுகிறது.
News October 12, 2025
கல்கி 2: தீபிகாவுக்கு பதில் ஆல்யா!

கல்கி 2-ல் தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் ஆல்யா பட் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக தீபிகா படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து யார் அவரின் சுமதி கதாபாத்திரத்தில் நடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ஆல்யா பட் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News October 12, 2025
சீக்கிரம் இந்த அரசு வேலைக்கு அப்ளை பண்ணுங்க

மத்திய அரசு பள்ளிகளில் (EMRS) உள்ள 7,267 ஆசிரியர் & ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.Ed முடித்த 55 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆசிரியர் அல்லாதவர்களுக்கு ₹18,000- ₹1,12,400 வரையும், ஆசிரியர்களுக்கு ₹35,400 – ₹2,09,200 வரையும் சம்பளம் வழங்கப்படும். வரும் அக்டோபர் 23-ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும். SHARE.