News October 12, 2025

நாமக்கல் அருகே கிணற்றில் மிதந்த சடலம்!

image

நாமக்கல், எர்ணாபுரத்தை சேர்ந்தவர் மாரப்பன். முன்னாள் பஞ்., தலைவர். இவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் 45 வயதுள்ள ஆண் சடலம் மிதந்தது. சம்பவ இடத்துக்கு நல்லிபாளையம் போலீசார் வந்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இது கொலையா? தற்கொலையா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News October 12, 2025

நாமக்கல் அருகே முகமூடி அணிந்து கொள்ளை!

image

நாமக்கல்: திருச்செங்கோடு, சின்னத்தம்பி பாளையம் பாப்பாங்காடு பகுதியில் வசிக்கும் கிருஷ்ணன், அவரது மனைவி இரவு 2 மணிக்கு நாய் குறைக்கும் சத்தம் கேட்டு எழ முயலும்போது, முகமூடி அணிந்த 3 நபர்கள், இருவர் முகத்திலும் ஸ்பிரே அடித்ததாகவும், காலை 7.00 மணிக்கு எழுந்து பார்க்கும் போது வீட்டின் இருந்த ஒரு பவுன் மோதிரம் மற்றும் ரூ.5000 காணவில்லை என்பதை அறிந்து மல்லசமுத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

News October 12, 2025

நாமாக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

நாமக்கல் மாவட்டத்தில் நாளை (அக்.13), மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்த மனுக்களை அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தின் மூலம், பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News October 12, 2025

நாமக்கல்: ரேஷன் கார்டு இருக்கா? இத பண்ணுங்க!

image

நாமக்கல் மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க

error: Content is protected !!