News October 12, 2025

திண்டுக்கல்லில் ரூ.1.55 கோடி முறைகேடு

image

திண்டுக்கல் பாலாஜிநகர் பகுதியில் உள்ள பிரபல ஆடிட்டர் அலுவலகத்தில் ரூ.1 கோடியே 55 லட்சம் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட கட்டண தொகை சிலரின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டதாக தெரியவந்தது. போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் உதவியாளர் அனிஷா டெய்சி, அவரது கணவர் விவேக்நாத் உள்பட 5 பேர்மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News

News March 7, 2026

திண்டுக்கல்: திடீர் கரண்ட் கட்? இனி Whatsapp மூலம் தீர்வு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள், திடீர் கரண்ட் கட் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்க இந்த 94431 11912 எண்ணிற்கு எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். மேலும் அவசர உதவிக்கு – 94987 94987 இந்த எண்ணிலும் அழைக்கலாம். இத்தகவலை எல்லோரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News March 7, 2026

ஒட்டன்சத்திரம்: தட்டித்தூக்கிய அமைச்சர்!

image

ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியை சேர்ந்த பல்வேறு மாற்றுக்கட்சியினர் தங்களது கட்சிகளிலிருந்து விலகி, திமுகவில் இணையும் நிகழ்ச்சி ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது. அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில், அவர்கள் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். கட்சியில் இணைந்தவர்களை அமைச்சர் சக்கரபாணி சால்வை அணிவித்து வாழ்த்தி வரவேற்றார்.

News March 7, 2026

கொடைக்கானல்: அடையாளம் தெரியாத எலும்புக்கூடு

image

கொடைக்கானல் கங்கா காம்பவுண்ட் பகுதியில் ஏரிச்சாலையில் இருந்து நீர் வெளியேறும் இடத்தில் பேண்ட் அணிந்த நிலையில் மனித எலும்புக்கூடு மற்றும் மண்டை ஓடு கிடந்தது. தகவலறிந்து வந்த கொடைக்கானல் காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார் தலைமையிலான போலீசார் அவற்றை கைப்பற்றி ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!