News October 12, 2025

மயிலாடுதுறை போலீசாரின் அதிரடி நடவடிக்கை

image

மயிலாடுதுறை அடுத்த செம்பனார்கோவில் பகுதியில் தடைசெய்யப்பட்ட 150 கிலோ குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளர் கோபாலகிருஷ்ணன் (30) என்பவர் கைது செய்யப்பட்டார். குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Similar News

News March 14, 2026

மயிலாடுதுறை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.i<<>>n என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News March 14, 2026

மயிலாடுதுறை: முக்கிய ரயில் நேரம் மாற்றம்

image

சென்னையிலிருந்து காலை 8:00 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை வழியாக திருச்சி செல்லும் சோழன் அதிவிரைவு ரயில், ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக காலதாமதமாக புறப்படும். வருகிற மார்ச் 16ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை சென்னை எக்மோரில் இருந்து காலை 8 மணிக்கு பதிலாக 10.15 மணிக்கு தாமதமாக புறப்பட்டு அனைத்து சந்திப்புகளுக்கும் 2.15 மணி நேரம் காலதாமதமாக வரும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

News March 14, 2026

மயிலாடுதுறை: கஞ்சா வியாபாரி குண்டாசில் கைது

image

மயிலாடுதுறை தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த மாப்படுகையை சேர்ந்த குகன் என்பவரை கடந்த 8-ம் தேதி போலீசார் கைது செய்து, 1 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். குகன் மீது ஏற்கனவே 6 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதால் ஆட்சியர் உத்தரவின்பேரில் போலீசார் குகனை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!