News October 12, 2025

இராமநாதபுரத்தில் வேலை நிறுத்தம்

image

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். நேற்று தொடங்கிய போராட்டத்தால் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளன. இதனால் மீனவர்களின் தினசரி வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் வர்த்தகம் வியாபாரம் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

Similar News

News March 12, 2026

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 17,342 பேர் எழுதினர்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை 85 மையங்களில் 17,342 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். மாவட்டத்தில் 10-ஆம் பொதுத்தேர்வை 261 தேர்வு மையங்களில் 8,183 மாணவர்கள், 8,588 மாணவிகள், தனித்தேர்வர்களாக 571 பேர் என மொத்தம் 17,342 பேர் தேர்வு எழுதினர். 85 தேர்வு மையங்களில் 105 பறக்கும் படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

News March 12, 2026

இராம்நாடு: உங்கள் வீட்டு பட்டா யார் பெயரில் இருக்கு?

image

இராம்நாடு மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என GoogleMap வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <>Tamil Nilam <<>>என்ற செயலியில் Location-ஐ ON செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE பண்ணுங்க

News March 12, 2026

ராம்நாடு : இனி PAN கார்டு தேவையில்லை..மத்திய அரசு

image

வீடு,மனை போன்ற 10 லட்சத்திற்கு மேற்பட்ட சொத்துக்களை பதிவு செய்யும் போது பான் எண் கட்டாயம் என தற்போது உள்ளது. இந்நிலையில்,ரூ.20 லட்சம் வரை சொத்துக்கள் வாங்கினால்,இனி பான் எண் கட்டாயமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.அதன்படி,ரூ.20 லட்சம் வரையிலான சொத்துக்களுக்கு பத்திரபதிவின் போது பான் எண் அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.இது வரும் ஏப்.1 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!