News October 12, 2025
திருப்பதியில் 24 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் இலவச தரிசனத்திற்கு குறைந்தது 24 மணிநேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வார விடுமுறை தினமான இன்று கட்டுக்கடங்காத அளவு பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. நேற்று புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை என்பதால் பஸ், வேன், கார், ஜீப், நடைபாதை வழியாக பல லட்சம் பக்தர்கள் திருமலையில் குவிந்தனர். SHARE IT.
Similar News
News March 6, 2026
ராகுல் மீது காங்கிரஸ் சீனியர்கள் அதிருப்தியா?

ராகுலுக்கு நெருக்கமான கிறிஸ்டோபர் திலக், ராஜ்யசபா MP வேட்பாளராக அறிவிக்கப்பட்டது, காங்கிரசில் உள்ள சீனியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பதவியை அழகிரி, திருநாவுக்கரசர், தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், கோப்பண்ணா உள்ளிட்டோர் எதிர்பார்த்து இருந்தனராம். ஆனால் சீனியர்களான தங்களை விடுத்து, ஜூனியருக்கு வாய்ப்பு வழங்கியிருப்பது அவர்களை அப்செட் செய்திருக்கிறது என்கின்றனர்.
News March 6, 2026
650 காலியிடங்கள், ரிசர்வ் வங்கியில் பணி..APPLY NOW

இந்திய ரிசர்வ் வங்கி, அதன் பல்வேறு அலுவலகங்களில் உதவியாளர் பணிக்கு (650 காலியிடங்கள்) தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இப்பணிக்கான தேர்வு, நாடு தழுவிய அளவில் இரண்டு கட்டமாக (ஆன்லைன் தேர்வு மற்றும் மொழித் திறன் தேர்வு) நடைபெறும். விண்ணப்பிக்க மற்றும் தேர்வு கட்டணங்களை ஆன்லைனில் செலுத்த மார்ச் 8-ம் தேதி கடைசி நாளாகும். மேலும், விவரங்களுக்கு www.rbi.org.in-ல் பார்க்கவும்.
News March 6, 2026
விஜய்- த்ரிஷா.. மோசமாக விமர்சித்த நடிகை!

திருமண நிகழ்ச்சிக்கு த்ரிஷாவுடன் விஜய் ஒன்றாக வந்ததை நடிகை சனம் ஷெட்டி விமர்சித்துள்ளார். ‘இது சரியானது இல்லை. மனைவியின் துயரத்தை புறக்கணிக்க முடியாது, கூடாது; நீண்ட கால ரசிகையாக இந்த நேரத்தில் தான் மிகவும் ஏமாற்றமடைவதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். முன்னதாக, விஜய் மீது பல விஷயங்களில் விமர்சனங்கள் எழுந்தபோது அவருக்கு சனம் ஷெட்டி அவருக்கு ஆதரவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


