News April 16, 2024
ஸ்தம்பித்த மதுரை! சித்திரை திருவிழா

மதுரை சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. இவ்விழாவின் 4-ம் நாளான நேற்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் வில்லாபுரத்தில் உள்ள பாவக்காய் மண்டகப்படியில் எழுந்தருளி அங்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதனையடுத்து மாலையில் சுவாமி, அம்மன் கோவிலுக்கு புறப்பட்டபோது, வழிநெடுகிலும் சுவாமி அம்மாளை தரிசிக்க லட்சக்கணக்காண பக்தர்கள் திரண்டதால் மதுரை மாநகரமே ஸ்தம்பித்தது.
Similar News
News February 20, 2026
மதுரை: பேருந்து மோதியதில் மாணவன் பலி

பேரையூர் அருகே சாப்டூரை சேர்ந்தவர் ஆனந்தராஜ்(19). இவர் திருமங்கலம் அருகே உள்ள கல்லூரியில் படித்து வந்த நிலையில் கல்லூரிக்கு சென்று விட்டு டூவிலரில் பேரையூர் – சாப்டூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கணவாய் மலை பகுதியில் சென்ற போது எதிரே வந்த பஸ் இவரது டூவிலரில் மோதியதில் ஆனந்தராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து பேரையூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News February 20, 2026
மதுரைக்கு வருகை தரும் முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை(பிப்.21) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மதுரை வருகிறார். அதில் காலை 10.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் மதுரை வரும் முதல்வர் 11.35 மணிக்கு நாகமலைபுதுக்கோட்டையில் உள்ள எல்காட் தொழில்துட்ப பூங்காவிற்கு செல்கிறார். பின்னர் தமுக்கம் புதிய மேம்பாலத்தின் ஒரு பகுதி திறந்து வைத்தல், தென்மண்டல தேர்தல் முகவர்கள் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
News February 20, 2026
மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

மதுரை மாநகரில் இன்று (19.02.2026) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.


