News October 12, 2025
கடலூர்: போலீஸ் என கூறி திருட்டு!

விருத்தாசலம் அடுத்த காப்பான்குளத்தை சேர்ந்தவர் சிவராமன் (44). இவர் கடந்த மாதம் பெரியகங்கணாங்குப்பத்தில் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் இருவரிடம் தான் ஒரு போலீஸ் என கூறி, அவர்கள் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகைகளை பறித்து சென்றுள்ளார். இதையடுத்து புகாரின் பேரில் போலீசார் சிவராமனை கைது செய்ய முயன்ற போது, அவர் தப்பி ஓடவே தடுக்கி விழுந்ததில் காலில் எழும்பு முறிவு ஏற்பட்டது.
Similar News
News March 18, 2026
கடலூர் மாவட்ட வாக்காளர்கள் விவரம்

கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் முதல் முறை வாக்காளர்கள் 48,932 பேர் உள்ளனர். 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 13 ஆயிரத்து 125 பேரும், 100 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 25 பேரும் வாக்காளர் பட்டியலில் உள்ளனர். மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 20,379 பேர் உள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
News March 18, 2026
மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு Saksham மொபைல் ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாக்களிப்பில் எளிதாக பங்கேற்க உதவுவதற்காக இந்த செயலியை மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்குச்சாவடி விவரங்களை அறியலாம், போக்குவரத்து வசதி கோரலாம், சக்கர நாற்காலிகள் போன்ற உதவிகளை முன்பதி செய்யலாம், தேர்தல் நாளில் தேவையான உதவிகளை முன்கூட்டியே பெற இந்த செயலி உதவும் என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
News March 18, 2026
கடலூர்: 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை – சோகம்

சிதம்பரம் அடுத்த மீதிக்குடியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகள் லாவண்யா(17). 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி வந்த லாவண்யா சரியாக தேர்வு எழுதாததால் மன வேதனையில் விஷத்தை குடித்துள்ளார். பின்னர் சென்னை ஸ்டான்லி மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லாவண்யா, இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். தற்கொலை எதற்கும் தீர்வல்ல!


