News October 12, 2025
Women’s WC: இன்று இந்தியா Vs ஆஸ்திரேலியா

மகளிர் உலக கோப்பையில் இன்று இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் தோற்ற இந்தியா, வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் உள்ளது. நடப்பு தொடரில் தோல்வியே காணாத ஆஸி., இப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி முதல் இடத்திற்கு முன்னேற நினைக்கிறது. வலுவான ஆஸி.,யை வீழ்த்த வேண்டுமானால் இந்தியா கடுமையான போட்டியை வெளிப்படுத்துவது அவசியம்.
Similar News
News October 12, 2025
மே.வங்க வன்கொடுமை வழக்கு: 3 பேர் கைது

மே.வங்கம், துர்காபூரில் ஒடிசாவை சேர்ந்த மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள், ஆளும் திரிணாமுல் காங்., அரசை சாடி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு துணை நிற்கும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதனிடையே, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி வலியுறுத்தி உள்ளார்.
News October 12, 2025
கரூர் சம்பவத்துக்கு இவர்தான் காரணம்: நயினார்

கரூர் சம்பவத்துக்கு செந்தில் பாலாஜி தான் காரணம் என்பது நாட்டுக்கே தெரியும் என நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் ₹10 லட்சம் நிவாரணம், ஆனால் சாதாரண விபத்தில் இறந்தால் ₹2 லட்சம் மட்டும்தான். இது என்ன ஆட்சி எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், NDA ஆட்சி அமையும்போது இவை அனைத்துக்கும் திமுக பதில் சொல்ல வேண்டியிருக்கும் என அவர் கூறினார்.
News October 12, 2025
GAS டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக் 3-வது நாளாக நீடிக்கிறது. இதனால், ஒரு சில இடங்களில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கு மேலும் ஸ்டிரைக் நீடித்தால், சிலிண்டர் கிடைக்காமல் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், பேச்சுவார்த்தைக்கு எண்ணெய் நிறுவனங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இன்று மாலை அல்லது நாளை சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிகிறது.