News October 12, 2025
சீரியஸாக இருக்கும்போது சிரிப்பு வருதா?

சீரியஸான நேரத்தில் அல்லது மன அழுத்தத்தில் நீங்கள் எப்போதாவது சிரிப்பதை உணர்ந்திருக்கிறீர்களா? இதை பலரும் மோசமான நடத்தை என்று நினைக்கிறோம். ஆனால், இது அதிக புத்திசாலித்தனத்தை பிரதிபலிப்பதாக உளவியலாளர்கள் கூறுகின்றனர். மேலும், பதட்டமான சூழ்நிலையில் சிரிப்பவர்கள், குறைவான மனப் போராட்டங்களை எதிர்கொள்வதாக 2017-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
Similar News
News October 12, 2025
அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்

தஞ்சை, பட்டுக்கோட்டையில் 4 அதிமுக கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்தனர். பட்டுக்கோட்டை நகராட்சியை சேர்ந்த 31-வது வார்டு கவுன்சிலர் குமணன், 4-வது வார்டு கவுன்சிலர் ஜெயராமன், 28-வது வார்டு கவுன்சிலர் லதா ஆண்ட்ரூஸ், 20-வது வார்டு கவுன்சிலர் சுரேஷ் ஆகியோர் கூண்டோடு திமுகவில் இணைந்துள்ளனர். இதனிடையே, இவர்கள் நான்கு பேரையும் அதிமுகவில் இருந்து நீக்கி, EPS சற்றுமுன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
News October 12, 2025
Power Bank-ஆல் போன் பேட்டரிக்கு பாதிப்பா?

போன்களை சார்ஜ் செய்ய 5V Input voltage தேவை. போனுக்கு ஏற்றவாறு வோல்டேஜ் வழங்கும் வகையில் தரமான Power bank-கள் வடிவமைக்கப்பட்டிருக்கும் . அதனால், பேட்டரிகளுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது. இருந்தாலும், பவர் பேங்க் சார்ஜில் இருக்கும்போது போன்களை சார்ஜ் செய்வது, பவர் பேங்க் உடன் வழங்கப்பட்ட கேபிளை பயன்படுத்தாமல், வேறு கேபிளை பயன்படுத்துவது போன்ற தவறுகளை செய்யாதீங்க. SHARE IT.
News October 12, 2025
RECIPE: சுவையான பால் கேசரி ரெசிபி!

*முதலில் ரவையை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள் *வாணலியில் பாலைக்காய்ச்சி கொதித்து வந்தவுடன் ரவையை சேர்த்து கிளற வேண்டும் *ரவை நன்றாக வெந்த பிறகு, அதில் சர்க்கரை, சிறிதளவு குங்குமப்பூ ஆகியவற்றை சேர்த்து கிளறுங்கள் *கேசரி பதத்திற்கு வந்ததும் ஏலக்காய், நெய்யில் வறுத்த முந்திரி ஆகியவற்றை சேர்த்து இறக்கினால் சுவையான பால் கேசரி தயார். SHARE IT.