News October 12, 2025
MS தோனி பொன்மொழிகள்

*உங்களின் ஒரு வெற்றி, ஆயிரம் விமர்சனங்களுக்கான முற்றுப்புள்ளி. *நூறு சதவிகித உழைப்பை கொடுத்தப் பின்னர், அதன் முடிவைப் பற்றி கவலைப்படாதீர்கள். *கடைசி நிமிடத்தில் கூட எதாவது அதிசயம் நடக்கலாம். அதனால், தன்னம்பிக்கையை இழக்காதே. *உங்கள் தனித்திறன் என்னவோ அதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். வெற்றி உங்களுடையதாகிவிடும். *திட்டம் சரியில்லை என்றால், திட்டத்தை மாற்றுங்கள். இலக்கை அல்ல.
Similar News
News October 12, 2025
‘பால்டாயில் பாய்’ உதயநிதி: இபிஎஸ் அட்டாக்

அதிமுகவை கடுமையாக அட்டாக் செய்து வரும் உதயநிதியை ‘பால்டாயில் பாய்’ என குறிப்பிட்டு இபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார். பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால், திமுக பயப்படுகிறது. தற்போது திமுக கூட்டணியில் உள்ள காங்., கம்யூ., விசிக உள்ளிட்ட கட்சிகளும் பதறுகின்றனர். தோல்வி பயத்தால், எதை பேசுவது என தெரியாமல் ஸ்டாலினும், அவரது கூட்டணி கட்சித் தலைவர்களும் பேசி வருகின்றனர் என சாடினார்.
News October 12, 2025
FLASH: சிக்கன் விலை உயர்வு

நாமக்கல் சந்தையில் கறிக்கோழி விலை கிலோவுக்கு ₹3 அதிகரித்துள்ளது. இதனால், கறிக்கோழி உயிருடன் ஒரு கிலோ ₹95-க்கு விற்பனையாகிறது. முட்டைக்கோழி கிலோ ₹120-க்கும், முட்டை ₹5.50-க்கும் விற்பனையாகிறது. சென்னையை பொறுத்தவரையில் கறிக்கோழி கிலோ 160-க்கும், தோல் நீக்கிய கறி கிலோ ₹200-₹220 வரையிலும் விற்பனையாகிறது. புரட்டாசி மாதம் நிறைவடைய உள்ளதால் சிக்கன் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. உங்கள் ஊரில் விலை என்ன?
News October 12, 2025
ரேஷன் கார்டில் இத உடனே பண்ணுங்க!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் அதே பகுதியில்தான் வசிக்கிறார்களா என்பதை ஆய்வு செய்து அவர்களின் பெயரை ரேஷன் அட்டையில் இருந்து நீக்கும் நடவடிக்கையை அரசு எடுத்துவருகிறது. இதனால், உங்கள் ரேஷன் அட்டையை உடனே புதுப்பிக்க வேண்டும். அருகில் உள்ள இ-சேவை மையத்துக்கு சென்றோ அல்லது https://www.tnpds.gov.in/ இணையதளம் வாயிலாகவோ உங்கள் முகவரியை அப்டேட் செய்யலாம். ஆதார் (அ) EB Bill வைத்தே இதனை மாற்றலாம். SHARE.