News October 12, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: காலமறிதல் ▶குறள் எண்: 486 ▶குறள்: ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து. ▶பொருள்: ஏற்ற காலம் பார்த்து ஆற்றல் மிக்கவன் காத்திருப்பது சண்டையிடும் ஆட்டுக்கடா, தன் பகைமீது பாய்வதற்காகப் பின்வாங்குவது போன்றதாகும்.

Similar News

News October 12, 2025

BREAKING: ஒரே அடியாக ₹3,000 வரை உயர்ந்தது

image

தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் 3 மடங்கு அதிகரித்துள்ளதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். வழக்கமாக சென்னையில் நெல்லைக்கு ₹5,000, கோவைக்கு ₹3,000, மதுரைக்கு ₹4,000 என குறைந்தபட்சம் ஒவ்வொரு ஊர்களுக்கும் ₹2,000 – ₹3000 வரை கூடுதலாக டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

News October 12, 2025

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

image

கோவை, திருநெல்வேலி, நீலகிரி, தேனி, தென்காசி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, சேலம், நாமக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று(அக்.12) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையிலும் மிதமான மழை பெய்யுமாம். இதனால் மக்களே, வாய்ப்பிருப்பின் ஞாயிறு விடுமுறையை வீட்டிலேயே, குடும்பத்துடன் செலவிடுங்க.

News October 12, 2025

BREAKING: டாஸ்மாக் கடைகளில் முக்கிய மாற்றம்

image

TASMAC கடைகளில் கூடுதல் பண வசூலை முற்றிலும் ஒழிக்க MRP விலையை ஸ்கேன் செய்து செலுத்தும் புதிய வசதி இந்த வாரத்திற்குள் அமலுக்கு வரவுள்ளது. தற்போதுள்ள கருவிகளில் சில கடைகளில் ₹10, ₹20 கூடுதலாக சேர்த்து வசூல் செய்வதாக புகார்கள் எழுந்தன. இதனால், ரொக்கப்பணம், டிஜிட்டல் பணம் வசூலுக்கு நவீன ஸ்கேனர் கருவி பயன்படுத்தப்பட உள்ளது. ஏற்கெனவே சில தினங்களாக நாமக்கல், மதுரையில் சோதனை செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!