News October 12, 2025

Sports Roundup: தமிழ் தலைவாஸ் 8-வது தோல்வி

image

*சுல்தான் ஜோஹர் கோப்பை ஹாக்கியில், இந்தியா 3-2 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது. *புரோ கபடியில் தமிழ் தலைவாஸ் 23-36 என்ற புள்ளிகள் கணக்கில் புனேரி பல்தான்ஸிடம் தோல்வி. * Women’ WC-ல், இலங்கையை 89 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது. *ஆர்டிக் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதியில் அன்மோல் கார்ப் தோல்வி. *வங்கதேசத்திற்கு எதிரான 2-வது ODI-ல் ஆப்கானிஸ்தான் 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

Similar News

News March 6, 2026

சர்ச்சைக்கு மத்தியில் விஜய் அறிவித்தார்

image

மாமல்லபுரத்தில் விஜய் தலைமையில் நாளை மகளிர் தின விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக, மகளிருக்கான திட்டங்கள் குறித்து அவர் அறிவிக்க உள்ளார். QR அனுமதிச் சீட்டு உள்ளவர்கள் மட்டும் நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என தவெக தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விஜய்யின் விவாகரத்து வழக்கு சர்ச்சைக்கு மத்தியில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

News March 6, 2026

போரில் ஈரானுக்கு உளவுத் தகவல்களை பகிரும் ரஷ்யா!

image

போரில் ஈரானுக்கு ரஷ்யா உதவி செய்வதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கூறுவதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க போர்க்கப்பல்கள், விமானங்கள் மற்றும் ரேடார்கள் பற்றிய உளவுத் தகவல்களை ரஷ்யா வழங்கி வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்தவும் ரஷ்யா உதவுவதாகக் தெரிகிறது.

News March 6, 2026

சிறுமியிடம் டிரம்ப் பாலியல் அத்துமீறலா?

image

எப்ஸ்டீன் வழக்கில் காணாமல் போன 16 பக்க ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில் 1983-ம் ஆண்டு டிரம்ப் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி ஒருவர் FBI-யிடம் தெரிவித்துள்ளார். தான் தடுத்தபோது டிரம்ப் தன்னை தாக்கியதாகவும் அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த பதிவுகள் இத்தனை ஆண்டுகளாக ஏன் மறைக்கப்பட்டன என்ற கேள்வி US அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!