News October 12, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 12, புரட்டாசி 26 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 3.15 PM – 4.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: சஷ்டி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்:வெல்லம் ▶பிறை: தேய்பிறை
Similar News
News March 15, 2026
தேர்தல் நேரத்தில் விஜய்க்கு சிக்கல்

ஏப்.23-ல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், விஜய்க்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தவெகவின் ஒற்றை முகமாக திகழும் அவர், இறுதிக்கட்ட பரப்புரையை தவறவிடும் சூழல் எழுந்துள்ளது. சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கில் ஏப்.20-ல் ஆஜராக செங்கல்பட்டு கோர்ட் விஜய்க்கு உத்தரவிட்டுள்ளது. இது தவெகவின் கடைசிக்கட்ட தேர்தல் பணிகளில் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. விஜய்க்கு விலக்கு கிடைக்குமா?
News March 15, 2026
தேர்தல் விதிமீறல்.. cVIGIL செயலியில் புகார் கொடுங்க!

சிவிஜில் (cVIGIL) என்பது தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து புகாரளிப்பதற்கு ECI உருவாக்கிய செயலி ஆகும். இதில் அரசியல் கட்சிகள் பணப்பட்டுவாடா செய்வது, பரிசுப் பொருள்கள் வழங்குவது, அனுமதித்த நேரத்தை மீறி பிரசாரம் மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்து பொதுமக்கள் புகாரளிக்கலாம். எந்தவொரு விதிமீறலாக இருந்தாலும், அதுபற்றிய போட்டோ, வீடியோ, ஆடியோவை ஆதாரமாக பதிவேற்றி புகார் தெரிவிக்கலாம்.
News March 15, 2026
அனைத்து ரேஷன் கார்டுக்கும்.. தமிழக அரசு அறிவிப்பு

ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது கைவிரல் ரேகையை மார்ச் 25-க்குள் பதிவு செய்ய வேண்டுமென மாவட்ட வாரியாக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனால், இதுவரை கைவிரல் ரேகையை பதிவு செய்யாதவர்கள், அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்குச் சென்று உடனே பணியை முடியுங்கள். இல்லையெனில், ரேஷன் அட்டையில் இருந்து பெயர்கள் நீக்கப்படலாம். ரேஷன் பொருள்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும். SHARE IT


