News October 12, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

Similar News

News March 13, 2026

சேலத்திக் அறிவித்தார் இபிஎஸ்!

image

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் தற்போது நிலவிவரும், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு, உள்ளிட்டவற்றை தடுக்க தவறிய ஆளும் திமுக அரசை கண்டித்து, வரும் 17ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில், சேலம் கோட்டை மைதானத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இதில் பொதுமக்கள், கட்சியினர் பங்கேற்க வேண்டும் என கூறினார்.

News March 13, 2026

சேலம்: தம்மம்பட்டியில் பயங்கர விபத்து!

image

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி – கெங்கவல்லி சாலையில் இன்று காலை அடையாளம் தெரியாத வாகனம் மோதி 70 வயது முதியவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தம்மம்பட்டி போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். பலியான முதியவர் யார்? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 13, 2026

சேலத்தில் முற்றிலும் இலவசம்! அறிவிப்பு

image

சேலம் மாநகராட்சி, சூரமங்கலம் மண்டலம் 26-வது வார்டுக்குட்பட்ட மத்திய பேருந்து நிலைய வணிக வளாக மேல் தளத்தில் ‘முதல்வர் படைப்பகம்’ தொடங்கப்பட்டுள்ளது. இதில் UPSC, TNPSC, SSC, RRB மற்றும் சீருடைப் பணியாளர் தேர்வுகளுக்கான உயர்தரப் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் இதனைப் படித்துப் பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!