News October 12, 2025

நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றம் இல்லை!

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் நேற்று (அக்டோபர் 11) நாமக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.05 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நாளை (அக்டோபர் 12) முதல் முட்டையின் விலை ரூ.5.05 ஆகவே நீடிக்கும் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Similar News

News October 12, 2025

நாமக்கல் அருகே கிணற்றில் மிதந்த சடலம்!

image

நாமக்கல், எர்ணாபுரத்தை சேர்ந்தவர் மாரப்பன். முன்னாள் பஞ்., தலைவர். இவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் 45 வயதுள்ள ஆண் சடலம் மிதந்தது. சம்பவ இடத்துக்கு நல்லிபாளையம் போலீசார் வந்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இது கொலையா? தற்கொலையா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்.

News October 12, 2025

நாமக்கல் அருகே தந்தையை வெட்டிய மகன்!

image

நாமக்கல்: சேந்தமங்கலம், துத்திக்குளத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (52). இவருடைய மகன் கோட்டையன், வேலைக்கு செல்லாமல் தந்தையிடம் அடிக்கடி செலவுக்கு பணம் கேட்டு வந்துள்ளார். இந்நிலையில், அவர் கொடுக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த கோட்டையன், அரிவாளால் ஈஸ்வரனை வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய கோட்டையனை சேந்தமங்கலம் போலீசார் தேடி வருகின்றனர்.

News October 12, 2025

நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று அக்டோபர்.11 நாமக்கல்-(தங்கராஜ் – 9498110895 ) ,வேலூர் -(சுகுமாரன் -8754002021), ராசிபுரம் -(சின்னப்பன் -9498169092), குமாரபாளையம் -(செல்வராசு – 9994497140) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!