News April 16, 2024
மோடி, அமித்ஷாவுக்கு மட்டும் தனி சட்டமா?

எதிர்க்கட்சி தலைவர்கள் செல்லும் ஹெலிகாப்டரில் மட்டும் அதிகாரிகள் சோதனை நடத்துவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி இந்தியா முழுவதும் தேர்தல் பரப்புரைக்கு செல்கிறார். ஆனால், இதுவரை ஒரு முறை கூட அவரின் வாகனத்திலோ அல்லது அமித்ஷாவின் வாகனத்திலோ எவ்வித சோதனையும் நடைபெறவில்லை. அவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News November 7, 2025
மோதல் போக்கு இருந்தால் நிதி வராது: நயினார்

தமிழகத்திற்கு தேவையான நிதியை தராமல் மத்திய அரசு வஞ்சிப்பதாக திமுக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்தால் நிதி வராது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதனால் மக்களுக்கு நன்மை இல்லை என்று கூறிய அவர், மத்திய – மாநில அரசுகளின் உறவு நன்றாக இருந்தால் தான் மத்திய அரசின் நிதி இங்கு வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார். உங்கள் கருத்து என்ன?
News November 7, 2025
சற்றுமுன்: பிரபல நடிகை மாரடைப்பால் காலமானார்

பிரபல பாலிவுட் நடிகையும், பாடகியுமான சுலக்ஷனா பண்டிட்(71) மாரடைப்பால் காலமானார். 9 வயதில் மழலை குரலில் பாட தொடங்கியவர், பிறகு பாலிவுட் ரசிகர்களை தனது குரலால் கட்டிப்போட்டார். பாடகியாக மட்டுமின்றி, 1970 முதல் 1980-களில் பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களான ராஜேஷ் கன்னா, வினோத் கண்ணா, சசி கபூர் போன்றோரின் படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார். அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News November 7, 2025
TTV தினகரனுக்கு மனநிலை பாதிப்பு: RB உதயகுமார்

ஜெயலலிதா, 10 ஆண்டுகள் அதிமுகவிலிருந்து நீக்கியதால் TTV தினகரன் மனநிலை பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக RB உதயகுமார் சாடியுள்ளார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் EPS-யை தொடர்புப்படுத்தி, TTV தினகரன் பேசியதற்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார். மேலும், அரசியலில் திக்கற்று நிற்பதால் EPS மீது TTV தினகரன் அவதூறுகளை அள்ளி வீசுவதாகவும், அவரை நம்பி வந்தவர்களை நட்டாற்றில் தவிக்க விட்டவர் எனவும் விமர்சித்துள்ளார்.


