News October 11, 2025
Gpay பணத்துக்கு ஆபத்து

நீங்கள் Gpay, phonepe போன்ற UPI-களை பயன்படுத்தும் போது, மோசடியாளர்களிடம் சிக்குவதை தடுக்க மத்திய அரசு Fraud Risk Indicator-FRI என்ற பாதுகாப்பை உருவாக்கியுள்ளது. இது மோசடியாளர்கள் நம்பரை கண்டால், உடனே அலர்ட் செய்யும். FRI அமைப்பில் Gpay இணையாததால், Gpay பயனர்கள் மோசடியாளர்களிடம் சிக்கும் அபாயம் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. நாட்டின் UPI டிரான்சாக்ஷனில் 30% Gpay-வில் நடப்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 12, 2025
சிரித்தே மயக்கும் சித்தி இத்னானி!

சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் கவனம் ஈர்த்த சித்தி இத்னானி தற்போது தெலுங்கு, குஜராத்தி, இந்தி படங்களில் பிஸியாக இருக்கிறார். எனினும் தமிழ் ரசிகர்களுக்காக அவ்வப்போது போட்டோஷுட் நடத்தி SM-ல் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், கன்னத்தில் குழி விழும் அளவிற்கு சிரித்து மகிழ்ந்த புகைப்படங்களை அவர் பகிர, சிரித்தே மயக்கிவிடுகிறீர்கள் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.
News October 12, 2025
சீரியஸாக இருக்கும்போது சிரிப்பு வருதா?

சீரியஸான நேரத்தில் அல்லது மன அழுத்தத்தில் நீங்கள் எப்போதாவது சிரிப்பதை உணர்ந்திருக்கிறீர்களா? இதை பலரும் மோசமான நடத்தை என்று நினைக்கிறோம். ஆனால், இது அதிக புத்திசாலித்தனத்தை பிரதிபலிப்பதாக உளவியலாளர்கள் கூறுகின்றனர். மேலும், பதட்டமான சூழ்நிலையில் சிரிப்பவர்கள், குறைவான மனப் போராட்டங்களை எதிர்கொள்வதாக 2017-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
News October 12, 2025
தமிழ் திரையுலகம் வீக் ஆகிவிட்டது : டி.ராஜேந்தர்

தமிழ் சினிமா வீக் ஆகிவிட்டதாக டி.ராஜேந்தர் வருந்தியுள்ளார். கன்னட படம் காந்தாரா ஓடுது தாறுமாறா; ஆனால் இங்கு தமிழ் படங்கள் ஏன் ஆகிறது நேர் மாறா; மலையாள படம் ஓடுது கலக்குது லோகா; தமிழ் திரையுலகம் ஆகிவிட்டது வீக்கா என்று அடுக்குமொழியில் பேசியுள்ளார். பிற மொழி படங்கள் நன்றாக ஓடுகிறதே என தனக்கு பொறாமை இல்லை, எனினும் தமிழ் சினிமா ஏன் இப்படி இருக்கிறது என்ற ஆதங்கம் ஏற்படுவதாக அவர் கூறியுள்ளார்.