News October 11, 2025

விஜய்யை கொன்று விடுவார்களா? திருமா பதில்

image

கரூருக்கு விஜய் சென்றால், அவரை கொல்ல வாய்ப்பிருப்பதாக நயினார் கூறியிருந்தார். ஆனால், மக்கள் செல்வாக்கு உள்ள விஜய், கரூருக்கு வந்து செல்வதில் என்ன பாதுகாப்பு குறைபாடு இருக்கிறது என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். CBI விசாரணையை தவெக கோருவது ஏன் என்றும் வினவியுள்ளார். நயினார், தமிழக பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு 4 மாதங்கள் ஆகியும், அண்ணாமலையே தலைவர் போல் செயல்படுவதாகவும் குறிப்பிட்டார்.

Similar News

News March 13, 2026

விஜய்க்கு எதிராக நடிகர்களை களமிறக்கும் திமுக

image

திமுக மேடைகளில் விஜய்க்கு எதிராக நடிகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர். வடிவேலுவை தொடர்ந்து தற்போது நடிகர் நாசர், பிரபலமாக இருந்தால் மட்டும் போதும் என்று நினைத்து கட்சி ஆரம்பிக்கிறார்கள் என விஜய்யை மறைமுகமாக விமர்சித்தார். மேலும், திட்டங்களை பட்டியலிட்டு சொல்வதல்ல கட்சி, தனியாக கொள்கை இருக்க வேண்டும் எனக்கூறிய அவர், படங்களின் பட்டியலை வைத்து நான் அரசமைப்பேன் என்று சொல்வது தேவையற்றது என்றார்.

News March 13, 2026

சற்றுநேரத்தில் வங்கிக் கணக்கில் ₹2,000

image

மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-Kisan) திட்டத்தின் கீழ் இன்று நாடு முழுவதும் 9.32 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ₹2,000 வரவு வைக்கப்படவுள்ளது. அசாம் கவுகாத்தியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் PM மோடி திட்டத்தின் 22-வது தவணையாக ₹18,640 கோடி வெளியிடுகிறார். இதற்கு விவசாயிகள், தங்களது வங்கிக் கணக்கில் E-KYC சரிபார்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம்.

News March 13, 2026

MP-க்கும், பெண்களுக்கும் பாதுகாப்பில்லை: தமிழிசை

image

MP கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் தாக்கப்பட்டதற்கு TN அரசின் பதில் என்ன என்று தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். இதே சம்பவம் வட இந்தியாவில் நடந்திருந்தால், இங்குள்ள 40 MP-யும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்திருப்பார்கள் என்றும், ஆனால் சக MP-யின் அலுவலகம் தாக்கப்பட்டதற்காக எதுவும் பேசவில்லை எனவும் கூறினார். தமிழகத்தில் MP-க்கும் பாதுகாப்பில்லை, பெண்களுக்கும் பாதுகாப்பில்லை எனவும் சாடினார்.

error: Content is protected !!